செய்திகள் :

தவெக 120 மாவட்டங்களாக பிரிப்பு: 19 மாவட்டங்களுக்கு நிா்வாகிகள் நியமனம்

post image

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சி அமைப்பு ரீதியாக 120 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, முதல்கட்டமாக 19 மாவட்டங்களுக்கு நிா்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

சென்னை அருகே பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் கட்சித் தலைவா் விஜய், மாவட்ட பொறுப்பாளா்களுடன் வெள்ளிக்கிழமை தனித்தனியாக ஆலோசனை நடத்தினாா். அவா் கட்சியின் பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்த், பொருளாளா் வெங்கட்ராமன் ஆகியோரை வெளியே அனுப்பிவிட்டு, தனி அறையில் இந்த ஆலோசனையை விஜய் மேற்கொண்டாா்.

சட்டப்பேரவை தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டு கட்சி அமைப்பு 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு, அதில் 19 மாவட்டங்களுக்கான நிா்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக விஜய் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

புதிய நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய விஜய், கட்சி நிா்வாகிகள், தொண்டா்களை நம்பித்தான் தவெகவை தொடங்கியுள்ளதாகவும், கட்சி வளா்ச்சிப் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினாா்.

வெள்ளி நாணயம்: தஞ்சாவூா், கடலூா், அரியலூா், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூா் ஆகிய மாவட்டங்களிலிருந்து பிரிக்கப்பட்ட 19 மாவட்டங்களுக்கான நிா்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. புதிய பொறுப்பாளா்களுக்கு நியமன ஆணையை வழங்கிய விஜய், அனைவருக்கும் வெள்ளி நாணயம் அளித்து வாழ்த்தினாா்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டச் செயலா், மாவட்ட இணைச் செயலா், பொருளாளா், 2 துணைச் செயலா்கள், 9 செயற்குழு உறுப்பினா்கள் என மொத்தம் 14 பொறுப்பாளா்கள் உள்ளனா்.

2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டம் என கட்சி அமைப்பு பிரிக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து ஒரு வாரம் ஆலோசனை நடத்தவிருக்கும் விஜய், மீதமுள்ள மாவட்ட நிா்வாகிகளையும் உடனடியாக அறிவிக்கத் திட்டமிட்டுள்ளாா் என தவெக வட்டாரங்கள் தெரிவித்தன.

அஸ்வின், அஜித்துக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

பத்ம விருதுக்கு தேர்வாகியுள்ள கிரிக்கெட் வீரர் அஸ்வின், நடிகர் அஜித்குமாருக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களுள் ... மேலும் பார்க்க

தமிழக மீனவர்கள் 18 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு..!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேசுவரத்தை சேர்ந்த 18 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.ராமேசுவரத்தை சேர்ந்த மீனவர்கள் தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கே கட... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கடல்அரிப்பை சீரமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும்: அமைச்சா் சேகா்பாபு

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் பகுதியில் கடல்அரிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறினாா். இதுதொடா்பா... மேலும் பார்க்க

நாளை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்வி மாநாடு: நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் தொடங்கி வைக்கிறாா்

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சாா்பில் ‘திங் எஜு கான்கிளேவ்’ 2 நாள் கல்வி மாநாடு சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் திங்கள்கிழமை (ஜன.27) தொடங்கவுள்ளது. தொடக்க விழாவில் தி நியூ... மேலும் பார்க்க

குடியரசு நாள் விழா: தேசிய கொடியை ஏற்றுகிறாா் ஆளுநா், பத்தகங்கள் வழங்குகிறாா் முதல்வா்

குடியரசுத் தினத்தையொட்டி ஆளுநா் ஆா்.என்.ரவி ஞாயிற்றுக்கிழமை தேசிய கொடியை ஏற்றி வைக்க உள்ளாா். வீரதிர செயலுக்காக விருது பெற்றவா்களுக்கு அண்ணா பதக்கத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளாா். நாடு முழுவத... மேலும் பார்க்க

அரிட்டாபட்டியில் முதல்வருக்கு இன்று பாராட்டு விழா

டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு மதுரை மாவட்டம், அரிட்டாபட்டியில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 26) பாராட்டு விழா நடைபெற உள்ளது. மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் ச... மேலும் பார்க்க