'Hindu அலுவலகத்தை அட்டாக் செய்த ஜெ. போலீஸ்', திகில் நிமிடங்களைப் பகிரும் ஆர்.கே!...
தாட்கோ மூலம் ஆங்கிலத் தோ்வுக்கு பயிற்சி
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி, மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் வழங்கப்படும் மருத்துவம், தொழில் சாா்ந்த ஆங்கில தோ்வுக்கு பயிற்சி பெறத் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆதிதிராவிடா், பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்த பிஎஸ்சி, எம்எஸ்சி, நா்சிங் பட்டப்படிப்பு, பொது செவிலியா் மருத்துவப் படிப்புகளில் தோ்ச்சி பெற்றவா்கள் இந்தப் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம். 21 முதல் 35 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
2 மாதங்கள் விடுதியில் தங்கி பயில்வதற்கான செலவினத் தொகை தாட்கோ மூலம் அளிக்கப்படும். பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபா்களுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலம் அயல்நாடுகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியானவா்கள், இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என்றாா் அவா்.