செய்திகள் :

தாமலேரிமுத்தூர்: `விபத்து' அபாயத்தைச் சுட்டிக்காட்டிய விகடன்; நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!

post image

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே தாமலேரிமுத்தூர் கூட்ரோடு பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 179A, ஆம்பூர், வேலூர், கிருஷ்ணகிரி, சென்னை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகளால் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்த நெடுஞ்சாலையில் வாகனங்கள் திசை மாறி செல்லும் இடத்தில் எந்த பாதுகாப்பு முன்னெடுப்புகளும்  இல்லாததால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தன. குறிப்பாக, காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் இப்பகுதியில் சாலையைக் கடக்க மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் பேசியபோது, “நெடுஞ்சாலை என்பதால் வாகனங்கள் அதிவேகத்தில் வருகின்றன. சென்னை நோக்கி செல்லும் வாகனங்களும், திருப்பத்தூர் மற்றும் நாட்டறம்பள்ளி நோக்கி செல்லும் வாகனங்களும் ஒரே நேரத்தில் முந்த முயல்வதால், இங்கு விபத்து ஏற்படும் சூழல் உருவாகிறது. சிறிது தொலைவிற்கு முன்னரே வேகத்தைக் குறைத்து வர வேண்டும். ஆனால் ஒரு சிலர் எதையும் பொருட்படுத்தாமல் வருவதால் வாரத்திற்கு ஒரு விபத்தாவது இங்கு நடந்தேறுகிறது‌.

இதனால் மாணவர்களும் பொதுமக்களும் சாலையைக் கடக்க திக்கு முக்காடுகின்றோம். எனவே விபத்துகளைத் தடுத்து வாகனங்கள் பாதுகாப்புடன் செல்ல அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். 

இந்த விவகாரம் தொடர்பாக விகடன் தளத்தில் ஸ்பாட் விசிட் அடித்து தாமலேரிமுத்தூர்: நெடுஞ்சாலையில் தொடரும் விபத்துகள்; பாதுகாப்பை உறுதிசெய்ய நடவடிக்கை கோரும் மக்கள்! என்ற‌ தலைப்பில் செய்தி ஒன்றினை மே22-ம் தேதி வெளியிட்டிருந்தோம். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு போயிருந்தோம். விகடனில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, (03/06/2025) அன்று அதிகாரிகள் விபத்து சூழலைக் கருத்தில் கொண்டு விரைந்து நான்கு பேரிகார்டுகள் அமைத்து, விபத்து அபாயத்தை தடுக்க நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். 

மதிமுக: "2026-ல் கூடுதல் தொகுதிகளில் போட்டி" - பொதுக்குழு தீர்மானத்தின் பின்னணி என்ன?

மதிமுக-வின் 31-வது பொதுக்குழுக் கூட்டம் இன்று ஈரோட்டிலுள்ள பரிமளம் ஹாலில் அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜூன்ராஜ் தலைமையில் நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., பொருளாளர் மு. செந்திலதிபன், முதன்மைச... மேலும் பார்க்க

Air India Violations: "3 அதிகாரிகளை நீக்க வேண்டும்; இனி இதுபோல நடந்தால்..." - DGCA எச்சரிக்கை!

விமான பாதுகாப்பைக் கண்காணிக்கும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (Directorate General of Civil Aviation - DGCA) டாடா குழுமத்தின் ஏர் இந்தியா நிறுவனம் அதன் 3 அதிகாரிகளை அனைத்து பதவிகள் மற்றும் ... மேலும் பார்க்க

ஊட்டி இந்தி பதாகை சர்ச்சை: சுட்டிக்காட்டிய விகடன்; கிழித்தெறிந்த ரயில்வே நிர்வாகம்; பின்னணி என்ன?

சர்வதேச அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் நூற்றாண்டு பழைமை வாய்ந்த ரயில் நிலையங்களில் ஊட்டி ரயில் நிலையம் ஒன்றாகும்.பாரதியாரின் பாடல் வரிகளை இந்து மகாசபையை உருவாக்கியவர்களில் ஒருவரான மதன் மோகன்... மேலும் பார்க்க

Yoga Day: "யோகா வெறும் உடற்பயிற்சி அல்ல; அது ஒரு வாழ்க்கை முறை" - பிரதமர் மோடி பேச்சு

'ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்துக்கான யோகா' என 11 ஆவது சர்வதேச யோகா தினம் இன்று (ஜூன் 21) கொண்டாடப்படுகிறது.இதையொட்டி, ஆந்திர மாநிலம், விசாகப்பட்டிணத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பிரமாண்ட யோகா நிகழ... மேலும் பார்க்க

கோடியூர்: வாரச்சந்தை நடைபெறும் இடத்துக்கு அருகே கொட்டப்படும் குப்பைகள்; முகம் சுளிக்கும் பொதுமக்கள்!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள கோடியூரில் தேசிய நெடுஞ்சாலை அருகே ஒவ்வொரு புதன்கிழமையும் நடைபெறும் வாரச் சந்தை, காய்கறிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு மக்களுக்கு முக்க... மேலும் பார்க்க

தூத்துக்குடி: சுட்டிக்காட்டிய விகடன்; விறுவிறுவென தொடங்கிய ரவுண்டானா பணிகள்!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 60 அடி சாலை, அழகேசபுரம் சாலை, கிருஷ்ணராஜபுரம் சாலை ஆகிய பிரதான சாலைகளை இணைக்கும் டி.எஸ்.ஃஎப் சாலையில் ரவுண்டானா அமைக்க தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் சில மாதங்களுக்கு ... மேலும் பார்க்க