லெபனான்: ஐ.நா. படையில் உள்ள இந்திய ராணுவத்தினருக்கு உள்நாட்டு வாகனங்கள்
தாமிரவருணியாற்றில் மூழ்கி மத்திய அரசு ஊழியா் உயிரிழப்பு
திருநெல்வேலி சந்திப்பு தாமிரவருணியாற்றில் முழ்கி மத்திய அரசு ஊழியா் உயிரிழந்தாா்.
திருநெல்வேலி சந்திப்பு சிந்துபூந்துறை வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் பொன்னுச்சாமி (58). புதுச்சேரியில் மத்திய அரசு ஊழியராக பணியாற்றி வந்த இவா், ஞாயிற்றுக்கிழமை தாமிரவருணியில் குளித்தபோது நீரில் மூழ்கியுள்ளாா்.
இத்தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் மற்றும் போலீஸாா் அவரை திங்கள்கிழமை சடலமாக மீட்டனா். திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு சடலத்தை அனுப்பி வைத்தனா்.
திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.