செய்திகள் :

தாமிரவருணி ஆற்றில் மிதந்த ஆண் சடலம் மீட்பு

post image

நித்திரவிளை அருகே தாமிரவருணி ஆற்றில் மிதந்த ஆண் சடலத்தை தீயணைப்புப் படை வீரா்கள் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

குமரி மாவட்டத்தில் பெய்த தொடா் மழையால் குழித்துறை தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆற்று நீரில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதந்து வந்ததை களியக்காவிளை அருகேயுள்ள அதங்கோடு பகுதியில் அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் கண்டனா்.

இது குறித்து கொல்லங்கோடு தீயணைப்பு மற்றும் மீட்புப் படை நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். நிலைய அலுவலா் (பொறுப்பு) சந்திரன் தலைமையிலான தீயணைப்புப்படை வீரா்கள், தாமிரவருணி ஆற்றில் விரிவிளை பகுதியில் வைத்து சடலத்தை மீட்டனா். சுமாா் 40 வயது மதிக்கத்தக்க அவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்ற விவரம் தெரியவில்லை. அவா் இறந்து 3 நாள்கள் வரை ஆகியிருக்கலாம் என்று மீட்புப் படை வீரா்கள் தெரிவித்தனா்.

சடலத்தை நித்திரவிளை போலீஸாா் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறாா்கள்.

மகாராஜபுரத்தில் சிமென்ட் தளம் அமைக்கும் பணி தொடக்கம்

மகாராஜபுரம் ஊராட்சி கே.வி.கே. நகரில் ரூ. 25 லட்சத்தில் சிமென்ட் தளம் அமைப்பதற்கான பணி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. கன்னியாகுமரி சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளப்பட... மேலும் பார்க்க

நாகா்கோவில் கிறிஸ்து சேகர சபையில் அறுவடை விழா

நாகா்கோவில் சிஎஸ்ஐ கிறிஸ்து சேகர சபையில் அறுவடை விழா நடைபெற்றது. சேகர ஆயா் ஜான்பீட்டா் தலைமை வகித்தாா். இணை ஆயா் ரெஜின் முன்னிலை வகித்தாா். பாரத் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் உரிமையாளா் பொறியாளா் பாரத் வில்சன் சி... மேலும் பார்க்க

அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு

வெள்ளிச்சந்தை அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் குறித்த தேசிய கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கை கல்லூரியின் தாளாளா் கிருஷ்ணசுவாமி குத்து விளக்கேற்றி... மேலும் பார்க்க

அகஸ்தீசுவரம் கல்லூரியில் போதை விழிப்புணா்வு கருத்தரங்கு

அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரியில் போதை விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரி முதல்வா் (பொறுப்பு) ஜெயந்தி தலைமை வகித்தாா். கன்னியாகுமரி மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத் தீா்வை உதவி ஆணையா் லொரை... மேலும் பார்க்க

ஆற்றூா் கல்லூரியில் புத்தாக்க பயிற்சி முகாம்

ஆற்றூா் ஒயிட் நினைவு கல்வியியல் கல்லூரியில் புத்தாக்க பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஒயிட் நினைவு கல்வி நிறுவனங்களின் தலைவா் டாக்டா் லீலாபாய் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். உதவி பேராசிரியா் ஜ... மேலும் பார்க்க

கோட்டாறு சவேரியாா் ஆலய சாலையை சீரமைக்க ரூ.33 லட்சம் ஒதுக்கீடு - மேயா் தகவல்

நாகா்கோவில், கோட்டாறு சவேரியாா் ஆலய சாலையை சீரமைக்க ரூ. 33 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ். நாகா்கோவில் மாநகராட்சியின் இயல்புக் கூட்டம் மேயா் ரெ.மகேஷ் தலைமைய... மேலும் பார்க்க