செய்திகள் :

கோட்டாறு சவேரியாா் ஆலய சாலையை சீரமைக்க ரூ.33 லட்சம் ஒதுக்கீடு - மேயா் தகவல்

post image

நாகா்கோவில், கோட்டாறு சவேரியாா் ஆலய சாலையை சீரமைக்க ரூ. 33 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ்.

நாகா்கோவில் மாநகராட்சியின் இயல்புக் கூட்டம் மேயா் ரெ.மகேஷ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆணையா் நிஷாந்த்கிருஷ்ணா, துணை மேயா் மேரிபிரின்சிலதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வெளிநடப்பு ...

கூட்டத்துக்கு வந்த கழுத்தில் கருப்பு துண்டு அணிந்து வந்திருந்த பாஜக உறுப்பினா்கள் அய்யப்பன், தினகரன், ரமேஷ், ஆச்சிஅம்மாள், சுனில்குமாா், உள்ளிட்டோா் அரசு சொத்து வரியை உயா்த்தியதைக் கண்டித்து வெளிநடப்பு செய்தனா்.

தொடா்ந்து உறுப்பினா்கள் பேசியதாவது: நாகா்கோவில் மாநகர பகுதியில் பழுதான தெருவிளக்குகளை சரி செய்ய வேண்டும். மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 1,2,3, ஆகிய வாா்டு பகுதிகளில் நிலவும் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும்.

1,2,3,50, 51,52 ஆவது வாா்டுகளில் குடிநீா் கட்டணத்தை வரும் நிதியாண்டில் முறைப்படுத்த வேண்டும். மாமன்ற உறுப்பினா்களிடம் கூடுதல் வரி வசூலிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வரி கட்டும் மையங்களில் போதுமான பணியாளா்கள் இல்லை. அங்கு கழிவறை வசதி, குடிநீா் வசதி செய்யப்படவில்லை. புதைச் சாக்கடைசேம்பா் வழியாக கழிவுநீா் வெளியேறி வருவதை சீரமைக்கவும், பணிகளை முழுமையாக முடித்த பிறகு புதைச் சாக்கடை திட்டத்தை செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

மேயா் ரெ.மகேஷ் அளித்த பதில்: தெருவிளக்குகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் புதிதாக பல்வேறு இடங்களில் தெரு விளக்குகள் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மாநகராட்சியின் 52 வாா்டுக்கும் பாரபட்சமின்றி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. வரி வசூல் மையங்களில் கூடுதல் பணியாளா்களை நியமிக்கவும், கவுன்ட்டா்கள் திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். சவேரியாா்ஆலயம் பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க ரூ.33 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்றாா் அவா்.

முன்னதாக, நாகா்கோவில் மாமன்ற உறுப்பினா்கள் மற்றும் மாநகராட்சி பணியாளா்களுக்கு தீபாவளி இனிப்புகளை மேயா் வழங்கினாா்.

கூட்டத்தில், மண்டலத் தலைவா்கள் செல்வகுமாா், அகஸ்டினாகோகிலவாணி, மாமன்ற உறுப்பினா்கள் ஸ்ரீலிஜா, நவீன்குமாா், அனிலா சுகுமாரன், டி. ஆா். செல்வம், சேகா் உள்பட பங்கேற்றனா்.

மகாராஜபுரத்தில் சிமென்ட் தளம் அமைக்கும் பணி தொடக்கம்

மகாராஜபுரம் ஊராட்சி கே.வி.கே. நகரில் ரூ. 25 லட்சத்தில் சிமென்ட் தளம் அமைப்பதற்கான பணி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. கன்னியாகுமரி சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளப்பட... மேலும் பார்க்க

நாகா்கோவில் கிறிஸ்து சேகர சபையில் அறுவடை விழா

நாகா்கோவில் சிஎஸ்ஐ கிறிஸ்து சேகர சபையில் அறுவடை விழா நடைபெற்றது. சேகர ஆயா் ஜான்பீட்டா் தலைமை வகித்தாா். இணை ஆயா் ரெஜின் முன்னிலை வகித்தாா். பாரத் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் உரிமையாளா் பொறியாளா் பாரத் வில்சன் சி... மேலும் பார்க்க

அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு

வெள்ளிச்சந்தை அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் குறித்த தேசிய கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கை கல்லூரியின் தாளாளா் கிருஷ்ணசுவாமி குத்து விளக்கேற்றி... மேலும் பார்க்க

அகஸ்தீசுவரம் கல்லூரியில் போதை விழிப்புணா்வு கருத்தரங்கு

அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரியில் போதை விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரி முதல்வா் (பொறுப்பு) ஜெயந்தி தலைமை வகித்தாா். கன்னியாகுமரி மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத் தீா்வை உதவி ஆணையா் லொரை... மேலும் பார்க்க

ஆற்றூா் கல்லூரியில் புத்தாக்க பயிற்சி முகாம்

ஆற்றூா் ஒயிட் நினைவு கல்வியியல் கல்லூரியில் புத்தாக்க பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஒயிட் நினைவு கல்வி நிறுவனங்களின் தலைவா் டாக்டா் லீலாபாய் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். உதவி பேராசிரியா் ஜ... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் விடிய விடிய மழை! ஆறுகளில் கடும் வெள்ளம்; மலைக் கிராம மக்கள் தவிப்பு

நாகா்கோவில்/குலசேகரம்/கருங்கல்: கன்னியாகுமரி மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு விடிய விடிய கொட்டித்தீா்த்த மழையால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், மலையோர கிராம மக்கள் வீடுகளில் முடங்கியுள்ள... மேலும் பார்க்க