செய்திகள் :

தாம்பத்திய உறவில் விருப்பமில்லாத காலம்... எப்படிக் கடப்பது? காமத்துக்கு மரியாதை 232

post image

ல்லா பெண்களுமே வாழ்க்கையின் ஏதோ ஒருகட்டத்தில் தாம்பத்திய உறவில் ஆர்வமில்லாமல் இருப்பார்கள். குடும்பத்தினர் நலனுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தில் பாதியைக்கூட தன் நலனுக்குக் கொடுக்காத பல பெண்கள், 'தான் செக்ஸில் விருப்பமில்லாமல் இருக்கிறோம்' என்பது தெரியாமலேயே அந்தக் காலகட்டத்தைக் கடந்திருப்பார்கள்.

தாம்பத்திய உறவைப் பொறுத்தவரை, 'கணவர் அனுபவிக்கிற பார்ட்னர்', 'மனைவி அனுபவிக்கப்படுகிற பார்ட்னர்' என்றே நம் சமூகம் பெரும்பாலும் பழகியிருப்பதால், தான் ஆசைப்படும்போதெல்லாம் மனைவி 'ம்' சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் ஆண்கள். விளைவு, செக்ஸில் விருப்பமில்லாத காலத்தையும் வழக்கம்போலவே கடக்க வேண்டிய கட்டாயம் பெண்களுக்கு... செக்ஸில் விருப்பமில்லாமல் இருப்பதற்கு 'பாலியல் தூண்டுதல் கோளாறு' (female sexual arousal disorder) காரணமாக இருக்கலாம். அது குறித்தும், அதற்கான தீர்வுகள் குறித்தும் பேசுகிறார் சென்னையைச் சேர்ந்த பாலியல் மருத்துவரும் உலக சுகாதார நிறுவனத்தின் உரிமைக்குழுவின் உறுப்பினருமான காமராஜ்.

Couple (Representational image)

"தாம்பத்திய உறவில் விருப்பம் ஏற்பட என்னவெல்லாம் தேவை என்பதை முதலில் தெரிந்துகொள்வோம். கணவர் மீதான விருப்பம் முக்கியம். இரண்டாவதாக, வலியில்லா உறவுக்கான வழுவழுப்புத் தன்மை வேண்டும். மூன்றாவதாக, உறுப்புகளின் இணைவு இயல்பாக இருக்க வேண்டும். நான்காவதாக உச்சகட்டம் வர வேண்டும். இந்த நான்கில் ஒன்றில் பிரச்னை ஏற்பட்டாலும் சரி, அல்லது நான்கிலும் பிரச்னை ஏற்பட்டாலும் சரி, சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு 'பாலியல் தூண்டுதல் கோளாறு' ஏற்படலாம்.

சில பெண்களுக்குத் தாம்பத்திய உறவின் மீதே வெறுப்பு இருக்கலாம். சிறுவயதில் பாலியல் தொல்லைக்கோ அல்லது வல்லுறவுக்கோ ஆளானவர்களுக்கு இந்தப் பிரச்னை வரலாம். இதை நாங்கள் 'அவெர்ஷியன் டிஸ்ஆர்டர்' என்போம். இதுபற்றி கணவரிடம் வெளிப்படையாகப் பேச முடியாமலும் விருப்பத்துடன் உறவில் ஈடுபட முடியாமலும் தவிக்கும் பெண்கள் பலர்.

sad woman

மனதுக்குப் பிடிக்காத ஆணை திருமணம் செய்துகொண்ட பெண்களுக்கு தாம்பத்திய உறவில் விருப்பமின்மை ஏற்படலாம். தவிர, குடிக்கிற கணவன், அடிக்கிற கணவன், மற்ற பெண்களுடன் தொடர்பில் இருக்கிற கணவன், சந்தேகப்படுகிற கணவன், பொதுவெளியில் தன்னை அவமானப்படுத்துகிற கணவன், தன் பிறந்த வீட்டினரை மதிக்காத கணவன், மாமியார், நாத்தனார் போன்ற உறவுகளுடன் ஏற்படுகிற பிரச்னையில் உதவி செய்யாத ஆண்களுடைய மனைவிகளுக்கும் தாம்பத்திய உறவில் விருப்பமின்மை ஏற்படலாம்.

ஏதோவொரு காரணத்தால் தாம்பத்திய உறவில் விருப்பமின்மை வந்துவிட்டது. ஆனால், கணவரின் விருப்பத்துக்காக ஈடுபடுகிறார்களென்றால் உணர்ச்சிவசப்பட முடியாது. உணர்ச்சிவசப்பட்டு உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து அது பெண்ணுறுப்பிலும் வெளிப்படும்போதுதான் வழுவழுப்புத்தன்மை ஏற்படும். அது நிகழாதபட்சத்தில் லூப்ரிகேஷன் இல்லாமல், உறவு அவர்களுக்கு வலி மிகுந்ததாக மாறிவிடும். இது விருப்பமின்மையை மேலும் அதிகரிக்கும்.

திருமணமான பெண்களில் 4 சதவிகிதம் பேருக்கு தாம்பத்திய உறவின் மீது பயம் இருக்கிறது. உறவின் ஆரம்ப நிலையில் இயல்பாக இருப்பவர்கள், முடியும் நேரத்தில் இறுக்கமாகி விடுவார்கள். விளைவு, பெண்ணுறுப்பும் இறுக்கமாகி விடும். ஒரு சிலர் கணவரை எட்டி உதைக்கவும் செய்யலாம். இவர்களுக்கு சிகிச்சையளிக்கிற மருத்துவர்களைக்கூட எட்டி உதைத்து விடுவார்கள். அவர்களை அறியாமலேயே செய்வதிது.

ஒரு சதவிகித பெண்களுக்கு உச்சகட்டம் அடைவதிலேயே சிக்கல் இருக்கும். இதுவும் அவர்களை விருப்பமின்மையை நோக்கி அழைத்துச் சென்று விடும்.

தன் உடல் மீது தாழ்வு மனப்பான்மை இருந்தாலும், தன் உடல்வாகை கணவன் கேலி செய்தாலும் பெண்களுக்கு உறவில் ஈடுபடப் பிடிக்காது.

Sexologist Kamaraj

ஹைப்போ தைராய்டு, நீரிழிவு போன்ற வாழ்நாள் குறைபாடு அல்லது நோய்கள் இருப்பவர்களுக்கும் தாம்பத்திய உறவில் விருப்பமின்மை ஏற்படலாம்.

மெனோபாஸ், கருத்தரிப்பு போன்ற காலகட்டங்களில் பெண்கள் உடலில் ஏற்படுகிற ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணமாகவும் செக்ஸில் விருப்பமின்மை ஏற்படலாம்.

தவிர, பெல்விஸ் பகுதியில் நரம்புகள் சேதமடைந்திருந்தாலும் பெண்ணுறுப்பு அல்லது சிறுநீர்ப்பையில் தொற்று ஏற்பட்டிருந்தாலும் விருப்பமின்மை வரும்.

மேலே சொன்ன அத்தனை பிரச்னைகளுக்கும், அவற்றுக்கேற்றபடி உளவியல் ஆலோசனை, மருத்துவ சிகிச்சை என தீர்வுகள் இருக்கின்றன. கூடவே, தன்னாலும் மனைவிக்கு பாலியல் தூண்டுதல் கோளாறு வரும் என்கிற புரிந்துணர்வும் மனமாற்றமும் கணவர்களுக்கு ஏற்பட்டால், பெண்களால் இந்த விருப்பமின்மையிலிருந்து நிச்சயம் மீண்டு வர முடியும்" என்கிறார் டாக்டர் காமராஜ்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

`இல்லாத பிரச்னை' பெரும்பாலான இந்திய மனைவிகளுக்கு இது தெரிவதில்லை..! | காமத்துக்கு மரியாதை -231

பெண்களைப்போல ஆண்களும் உருவகேலிக்கு ஆளாகிறார்கள். முன்நெற்றியில் முடிகொட்டிப் போனால், பரந்த மார்பு இல்லையென்றால், போதுமான உயரம் இல்லையென்றால், ஏன் அவர்களுடைய நிறத்தை வைத்துக்கூட சில நேரங்களில் கேலி செய... மேலும் பார்க்க

கல்யாணமாகப்போகுதா..? அப்போ இந்த 4 பாயின்ட் உங்களுக்காகத்தான்! - காமத்துக்கு மரியாதை 230

''திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால், சில அடிப்படை விதிகள் கட்டாயம் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்'' என்கிற டாக்டர் காமராஜ், அந்த விதிகள்பற்றி விவரிக்கிறார். love coupleஎல்லாருக்க... மேலும் பார்க்க

Couple: பொதுவெளியில் கெட்ட வார்த்தை பேசுகிற ஆணா நீங்கள்? - காமத்துக்கு மரியாதை 229

சில ஆண்களுக்கு வாயை திறந்தாலே சர்வசாதாரணமாக கெட்ட வார்த்தைகள் வந்து விழும். அது தவறு என்கிற உறுத்தலே அவர்களிடம் இருக்காது. தவிர, அப்படி பேசுவதை ஏதோ கெத்து என்பது போல நடந்துகொள்வார்கள். இவர்களுக்கு கெட... மேலும் பார்க்க