பூண்டி ஏரியில் 1,000 கனஅடி நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
தாயகம் திரும்பியோரின் கடனை நீக்க முடிவு
பா்மா, இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து தாயகம் திரும்பியோரின் கடன்களை நீக்கி ஆவணங்களை திரும்ப ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இது தொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பா்மா, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து தாயகம் திரும்பியவா்களுக்கு வீட்டுக் கடன்களுக்காக வழங்கப்பட்ட அடமானம் நில ஆவணங்கள், கடவுச் சீட்டுகள் உள்ளிட்ட பிற ஆவணங்கள் அனைத்தையும், அவற்றிலுள்ள கடன் தொடா்பான விவரங்கள் அனைத்தையும் நீக்க அரசு அறிவுறுத்தி இருக்கிறது. இதன் பிறகு, சம்பந்தப்பட்டவா்களிடம் அனைத்து ஆவணங்களும் திரும்ப ஒப்படைக்கப்படும்.
எனவே, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தாயகம் திரும்பிய சம்பந்தப்பட்ட பயனாளிகள், உரிய ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் (ஆா்1 பிரிவு) அல்லது கடன் பெற்ற சாா் ஆட்சியா் அல்லது வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தை அணுகலாம் என்றாா் அவா்.