செய்திகள் :

தாயகம் திரும்பிய 8.79 லட்சம் ஆப்கன் மக்கள்! எஞ்சியவர்களை நாடு கடத்தும் பாகிஸ்தான்!

post image

பாகிஸ்தானிலிருந்து அப்கான் அகதிகளை தங்களது தாயகத்திற்கு நாடு கடத்தும் பணி துவங்கவுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் சட்டவிரோதமாக குடியேறி வசித்து வரும் ஆப்கன் குடியுரிமை அட்டை உரிமையாளர்கள் தாங்களாகவே தங்களது நாட்டிற்கு திரும்ப பாகிஸ்தான் அரசு விதித்திருந்த காலக்கெடுவானது நேற்றுடன் (மார்ச் 31) முடிவடைந்தது.

இதனைத் தொடர்ந்து, அந்நாட்டிலுள்ள ஆப்கன் மக்கள் இன்று (ஏப் 1) முதல் தங்களது தாயகத்திற்கு நாடு கடத்தப்படுவார்கள் என பாகிஸ்தான் அரசின் வானொலியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் வெளியான அறிக்கையில், ஆப்கன் நாட்டினர் தங்கள் தாயகம் திரும்ப விதிக்கப்பட்டிருந்த காலக்கெடுவானது முடிவடைந்ததினால் அதை மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போது வரை பாகிஸ்தானிலிருந்து 8,78,972 ஆப்கன் மக்கள் தாங்களாகவே தங்களது நாட்டிற்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு, பாகிஸ்தான் அரசு இஸ்லாமபாத் மற்றும் ராவல்பிண்டி நகரத்தில் சட்டவிரோதமாக குடியேறி வாழும் ஆப்கன் அகதிகளை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்து நாடு கடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானிலுள்ள தங்களது நாட்டு மக்களை வலுக்கட்டாயமாக நாடு கடத்த வேண்டாம் என ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, ஆப்கானிஸ்தானின் அகதிகள் மற்றும் நாடு திரும்புதல் அமைச்சர் மவ்லவி அப்துல் கபிர், பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் ஆப்கன் மக்களை வலுக்கட்டாயமாக நாடு கடத்தும் திட்டத்தை நிறுத்தி அவர்கள் தாங்களாகவே நாடு திரும்ப அனுமதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, இரட்டை நகரங்களில் வசிக்கும் பதிவு செய்த சான்று வைத்துள்ள ஆப்கன் நாட்டினர் வரும் ஜூன் 30-க்குள் தாங்களாகவே தங்களது தாயகம் திரும்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், ஆப்கன் மக்களை வலுக்கட்டாயமாக நாடு கடத்தும் பாகிஸ்தான் அரசின் இந்தத் திட்டத்திற்கு பல்வேறு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:மலேசியா எரிவாயு குழாய் வெடி விபத்து: 100க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

பழம்பெரும் நடிகர் மனோஜ் குமார் மறைவு: பிரதமர் இரங்கல்

மும்பை: ஹிந்தி திரையுலகின் ஜாம்பவானும் பழம்பெரும் நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான மனோஜ் குமார்(87) உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை அதிகாலை மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவரது... மேலும் பார்க்க

பழம்பெரும் நடிகர் மனோஜ் குமார் காலமானார்

மும்பை: ஹிந்தி திரையுலகின் ஜாம்பவானும் பழம்பெரும் நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான மனோஜ் குமார்(87) உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை அதிகாலை மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.பழம்பெ... மேலும் பார்க்க

சிரியா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்! 9 பேர் பலி!

சிரியா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சிரியாவின் தென்மேற்கு பகுதிகளின் மீது நேற்று (ஏப்.2) இரவு இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டத... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட்: பிகார் அரசினால் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட நக்சல் கைது!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரூ.1 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த நக்சல் ஒருவர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பலாமு மாவட்டத்தின் துரிக்தார் மலைப்பகுதியில் மாவோயிஸ்டு அமைப்பின் க... மேலும் பார்க்க

கிரீஸ் அகதிகள் படகு விபத்து: 2 குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!

கிரீஸ் நாட்டின் லெஸ்போஸ் தீவின் அருகில் அகதிகள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 குழந்தைகள் உள்பட 7 பேர் பலியாகியுள்ளனர். கிரீஸ் நாட்டின் கிழக்குப் பகுதியிலுள்ள லெஸ்போஸ் தீவை நோக்கி ஏகன் ... மேலும் பார்க்க

இலங்கை: பிரதமர் மோடியின் வருகையால் தெரு நாய்களைப் பிடிக்கும் அரசு! மக்கள் போராட்டம்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு இலங்கையிலுள்ள தெரு நாய்களைப் பிடிக்கும் அரசின் திட்டத்திற்கு எதிராக அந்நாட்டு மக்களும் ஆர்வலர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்தியப் பிரதமர் ... மேலும் பார்க்க