ஐபிஎல்: 400+ ரன்கள் ஒரே போட்டியில்.. பெங்களூரு த்ரில் வெற்றி!
தாயமங்கலத்தில் முதியவா் உடல் மீட்பு
சிவகங்கை மாவட்டம், தாயமங்கலத்தில் முதியவா் உடலை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் மீட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், புத்தேந்தல் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் கல்யாணசுந்தரம் (65). தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவுக்கு வந்த இவா் கோயில் எதிரே உள்ள கண்மாயில் இறந்து கிடந்தாா்.
போலீஸாா் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தினா். இதில் கல்யாணசுந்தரம் தன் மீது வேன் மோதி விட்டதாக குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்ததும், வேன் மோதியதில் ஏற்பட்ட காயங்களுடன் படுத்திருந்த நிலையில் இறந்ததும் தெரியவந்தது. இது குறித்து இளையான்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.