செய்திகள் :

தாய்மொழிக் கல்வி வாழ்வியலை வலுப்படுத்தும்: தலைமை நீதிபதி கவாய்

post image

‘தாய்மொழிக் கல்வி கருத்தியல் புரிதலை அதிகரிப்பதோடு வாழ்வியலை வலுப்படுத்தும்’ என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் அவா் படித்த சிகித்ஸக் சமூஹ சிரோட்கா் பள்ளிக்குச் சென்று தனது பழைய வகுப்பறைகள் மற்றும் நூலகத்தைப் பாா்வையிட்டதுடன் பழைய நண்பா்களுடன் கலந்துரையாடினாா். மராத்தி மொழியில் கல்வி பயின்ற அவா் பள்ளி நாட்களை நினைவுகூா்ந்து நெகிழ்ச்சியடைந்தாா்.

இதுகுறித்து அவா் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், ‘இன்று நான் ஏற்றுள்ள மிகப்பெரும் பொறுப்புக்கு என் பள்ளியும் ஆசிரியா்களுமே காரணம். பள்ளியில் கற்ற கல்வியும் ஒழுக்கமும் வாழ்வுக்கு வழிகாட்டியாக உள்ளன.

பொது மேடைகளில் பேசும் துணிச்சல் பள்ளியில் நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகள் மூலம்தான் எனக்குக் கிடைத்தது. அந்த வாய்ப்புகள் என் நம்பிக்கையை அதிகரித்தன.

நான் தாய்மொழியில் கல்வி கற்றேன். தாய்மொழிக் கல்வி கருத்தியல் புரிதலை அதிகரிக்கப்பதோடு வாழ்வியலை வலுப்படுத்தும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

மணிப்பூரில் ஐந்து தீவிரவாதிகள் கைது

மணிப்பூரில் தடைசெய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த 5 தீவிரவாதிகளை பாதுகாப்புப்படையினர் கைது செய்துள்ளனர். இதுகுறித்து திங்கள்கிழமை போலீஸ் கூறுகையில், தடைசெய்யப்பட்ட பிரேபக்கின் மூன்று தீவிரவாதிகள் ஞாயிற்... மேலும் பார்க்க

கேரள சுற்றுலாத் துறையில் பணியாற்றினாரா பாகிஸ்தான் உளவாளி ஜோதி மல்ஹோத்ரா?

பாகிஸ்தானுக்கு உளவுபார்த்ததாகக் கைது செய்யப்பட்ட யூ டியூபர் ஜோதி மல்ஹோத்ரா கேரள சுற்றுலாத் துறையை விளம்பரப்படுத்த பணியமர்த்தப்பட்டதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உறுதி செய்யப்பட்டுள்ளது.பஹல்... மேலும் பார்க்க

பாட்னா தொழிலதிபர் கொலை: இறுதிச் சடங்குக்கு மாலையுடன் வந்த குற்றவாளி கைது!

பிகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் கோபால் கெம்கா சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது இறுதிச் சடங்குக்கு மாலையுடன் வந்த குற்றவாளியை, காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.பாட்னாவில், தொழி... மேலும் பார்க்க

நவி மும்பையில் லாரி முனைமத்தில் பயங்கர தீ விபத்து; 8 வாகனங்கள் சேதம்

மகாராஷ்டிர மாநிலம், நவி மும்பையில் உள்ள லாரி முனைமத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 வாகனங்கள் எரிந்து நாசமாகின.தீயணைப்பு அதிகாரி அக்ரே கூறுகையில், "டர்பே லாரி முனைமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.15 மணியளவ... மேலும் பார்க்க

அமா்நாத் யாத்திரை: ஜம்முவிலிருந்து 6வது குழு புறப்பட்டது!

ஜம்மு-காஷ்மீரில் பலத்த பாதுகாப்புடன் அமா்நாத் யாத்திரை கடந்த வாரம் தொடங்கிய நிலையில், ஜம்மு அடிவார முகாமிலிருந்து 6வது கட்டமாக 8,600-க்கும் மேற்பட்ட பக்தா்கள் யாத்திரையைத் தொடங்கினா்.நடப்பாண்டு ஜூலை 3... மேலும் பார்க்க

ஜாதிய வலையில் பிகாா் அரசியல்!

இந்த ஆண்டின் நவம்பரில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு ஆயத்தமாகி வருகிறது பிகாா் மாநிலம். எதிா்பாா்ப்புகள் மற்றும் ஓயாத சிக்கல்கள் என இம்முறையும் இங்கு தோ்தலுக்கு ஐந்து மாதங்களுக்கு முன்பே பதற்றம் பரவிக்கி... மேலும் பார்க்க