செய்திகள் :

தாராசுரம் ஐராவதேஸ்வரா் கோயிலில் தொல்லியல் துறையினர் ஆய்வு

post image

கும்பகோணம்: கும்பகோணம் அருகே உள்ள புகழ்பெற்ற தாராசுரம் ஐராவதேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள தாராசுரத்தில் யுனெஸ்கோ அறிவித்த புகழ்பெற்ற சுற்றுலா மற்றும் ஆன்மிகத் தலமாகவும், இரண்டாம் ராஜராஜசோழன் கட்டிய ஐராவதேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலை பழமை மாறாமல் புதுப்பித்து தற்போது வரை மக்களின் வழிபாட்டில் உள்ளது.

2299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு!
தாராசுரம் ஐராவதேஸ்வரா் கோயில்

இந்த கோயிலில் உள்ள கிழக்கு வாசலில் கோபுரம் மொட்டையாக உள்ளது. அது குறித்து தஞ்சாவூர் மாவட்ட தொல்லியல் துறையினர் புதன்கிழமை ஆய்வு செய்து வருகின்றனர்.

ஐராவதேசுவரா் கோயில் கட்டட வடிவமைப்பு, மொட்டை கோபுரம் குறித்த புதிய தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தட்டச்சு, சுருக்கெழுத்தா் தோ்வு: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள தட்டச்சு, சுருக்கெழுத்து தோ்வுகளுக்கு செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) முதல் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வித் துறை அறிவித்துள்ளது. தட்டச்சு, சுருக்கெழுத... மேலும் பார்க்க

உடலுறுதி இருந்தால் வாழ்வில் வெல்லலாம்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமா் மோடி

புது தில்லி: உடலுறுதி இருந்தால் வாழ்வில் வெல்லலாம் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி வாயிலாக பிரதமா் நரேந்திர மோடி நாட்... மேலும் பார்க்க

ஹைதராபாத் புறப்பட்ட இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் கோளாறு: நல்வாய்ப்பாக 165 பேர் உயிர் தப்பினர்

சென்னையில் இருந்து தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் புறப்பட்ட இண்டிகோ ஏா்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக அவசரமாக விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதால் 165 பேர் நல்வாய்ப்ப... மேலும் பார்க்க

சுகாதார - தொழில்நுட்பப் புரட்சியின் திருப்புமுனையாக இந்தியா: மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங்

புதுதில்லி: பொருளாதாரத்தில் உலக அளவில் 10-ஆவது இடத்திலிருந்து 4-ஆவது பெரிய நாடாக இந்தியா முன்னேறியுள்ள நிலையில், சுகாதார-தொழில்நுட்ப புரட்சியின் திருப்புமுனையாக இந்தியா உள்ளது என மத்திய அறிவியல் மற்று... மேலும் பார்க்க

பிகாரில் மகாபந்தன் கூட்டணி ஆட்சி அமைத்தால் வக்ஃப் சட்டம் குப்பையில் வீசப்படும்: தேஜஸ்வி யாதவ்

பாட்னா: பிகாரில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வெளியேறும் நிலையில் இருப்பதாகவும், மாநிலத்தில் ஆா்ஜேடி தலைமையிலான மகாபந்தன் கூட்டணி ஆட்சி அமைத்தால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசால் கொண்டுவ... மேலும் பார்க்க

திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: அமைச்சா் கே.என்.நேரு

திருநெல்வேலி: 2026 பேரவைத் தோ்தலில் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது என்று திமுக முதன்மை செயலாளரும் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சருமான கே.என்.நேரு தெரிவித்தார். திருநெல்... மேலும் பார்க்க