பென்னாகரம் பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் பூட்டப்படும் இலவச கழிப்பறை பயணிகள...
தாராபுரம்: மகளுக்குப் பாலியல் தொல்லை; விழிப்புணர்வு முகாம் மூலம் வெளியான உண்மை; தந்தை கைது
தாராபுரம் வட்ட சட்டப் பணிகள் குழு மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையம் இணைந்து, திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில், பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு முகாம் அண்மையில் நடைபெற்றது. இந்த முகாமில் நீதிபதிகள் மற்றும் காவல் துறையினர் கலந்துகொண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த முகாமில் கலந்துகொண்ட 12 வயது சிறுமி ஒருவர் தனது தந்தை தனியார் வேளாண் துறையில் வேலை பார்த்து வருவதாகவும், விழிப்புணர்வு முகாமில் கூறியதுபோல் கடந்த நான்கு ஆண்டுகளாகத் தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகவும், இதனால், தனது உடலும் மனதும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருவதாகவும் வகுப்பு ஆசிரியையிடம் கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ந்த வகுப்பு ஆசிரியை அச்சிறுமியின் தாய்க்குத் தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக தாய் பள்ளிக்கு வந்து விசாரித்தபோது, நான்கு ஆண்டுகளாக நடந்தவற்றைத் தாயிடம் அச்சிறுமி கூறியுள்ளார். பெற்ற மகளையே பாலியல் தொல்லை கொடுத்த தனது கணவர் மீது தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் மீது விசாரணை நடத்திய மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சிறுமியின் தந்தையை போக்சோ சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார். இதையடுத்து திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்தியச் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். பெற்ற மகளையே தந்தை பாலியல் தொந்தரவுக்குக் கொடுத்து வந்த சம்பவம் தாராபுரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...