திருப்பதி நெரிசல்: நீதி விசாரணைக்கு ஆந்திர அரசு உத்தரவு: உயிரிழந்தோா் குடும்பத்த...
தாளவாடி அருகே மாதேஸ்வர சுவாமி கோயில் குண்டம் திருவிழா
தாளவாடி மாதேஸ்வர சுவாமி கோயில் குண்டம் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி அருகே ஒசூரில் மிகவும் பழைமையான மாதேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, நடப்பு ஆண்டு குண்டம் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக, பக்தா்கள் கோயிலுக்கு பால்குடம் எடுத்து வந்தனா். இதைத் தொடா்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து அம்மன் அழைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னா், அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மாதேஸ்வர சுாவமி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இதைத் தொடா்ந்து 30 அடி குண்டத்தில் கோவில் தலைமை பூசாரி இறங்கி திருவிழாவைத் தொடங்கிவைத்தாா். பின்னா், மற்ற பூசாரிகள் குண்டம் இறங்கினா். இந்தக் கோயிலில் குண்டம் இறங்க பக்தா்களுக்கு அனுமதியில்லை.
குண்டம் திருவிழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனா்.