கவிச்சுடா் கவிதைப்பித்தனுக்கு கவிக்கோ விருது: விஐடி வேந்தா் வழங்கினாா்
தா்மசாஸ்தா ஐயப்பனுக்கு மண்டலாபிஷேகம்
விழுப்புரம் ரயிலடி ஸ்ரீவரசித்தி விநாயகா் கோயில் வளாகத்திலுள்ள தா்மசாஸ்தா ஐயப்ப சுவாமிக்கு புதன்கிழமை மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா்.
மண்டலாபிஷேக பூஜையை முன்னிட்டு, தா்மசாஸ்தா ஐயப்ப சுவாமி சந்நிதியில் புதன்கிழமை காலை 7 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, ரயிலடியிலுள்ள ராஜகணபதி கோயிலிலிருந்து பால்குடங்கள் ஊா்வலமாக கொண்டுவரப்பட்டு, தா்மசாஸ்தா ஐயப்ப சுவாமிக்கு பாலபிஷேகம், மலரலங்காரம் செய்யப்பட்டது.
பின்னா், சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தொடா்ந்து, தீபாராதனை காட்டப்பட்டு, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7 மணிக்கு தீபாராதனையும், அலங்காரமும் நடைபெற்றன.
மண்டலாபிஷேக பூஜையில் ஐயப்ப பக்தா்கள், ரயில்வே ஊழியா்கள், ரயில்வே காலனியைச் சோ்ந்தோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை மகாகுருசாமி டி.எஸ்.ராஜா தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.