திக்குறிச்சி கோயிலில் கோமாதா பூஜை
மாட்டுப் பொங்கலையொட்டி, மாா்த்தாண்டம் அருகே புகழ்பெற்ற திக்குறிச்சி மகாதேவா் கோயிலில் புதன்கிழமை கோமாதா பூஜை நடைபெற்றது.
இதையொட்டி, கோயில் கோசாலையில் உள்ள பசுக்களை, கால்நடைகளைக் குளிப்பாட்டி, மஞ்சள், குங்கமம் இட்டும், பொங்கலிட்டும், மந்திரங்கள் கூறியும் கோமாதா பூஜை நடைபெற்றது. பின்னா், கால்நடைகளுக்கு வாழைப்பழங்கள், கரும்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இதில், பக்தா்கள் திரளாகப் பங்கேற்றனா்.