தூத்துக்குடி: `அடிக்கடி குரைக்கின்றன'- குடிபோதையில் நாயை கல்லால் தாக்கிக் கொன்ற ...
'திண்டுக்கல்லில் சில பணிகளில் தொய்வு இருக்கிறது' - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தார். அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் 52 துறை அலுவலர்களுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
பின் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, ``முதலமைச்சர் உத்தரவின் பேரில் ஒவ்வொரு மாவட்டமாக சென்று மாவட்ட அமைச்சர்கள், அனைத்து துறை அரசு அலுவலர்களையும் வரவழைத்து அரசின் திட்டப் பணிகள் எவ்வாறு செயல்பட்டு வருகிறது. முதலமைச்சர் அறிவித்த பணிகள் எல்லாம் நடக்கிறதா? எந்த பணிகளில் தொய்வு இருக்கிறது? எந்த பணிகள் முடிவடைந்துள்ளது என ஆய்வு செய்துள்ளோம்.

அதன் தொடர்ச்சியாக திண்டுக்கல்லில் ஆய்வு மேற்கொண்டுள்ளோம். பல்வேறு திட்டங்களில் திண்டுக்கல் மாவட்டம் சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும், சில பணிகளில் தொய்வு இருப்பதை கண்டறிந்துள்ளோம். இதனை எப்படி விரிவுப்படுத்த வேண்டும் என்று நானும் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் ஆலோசனை செய்து அதில் சில பணிகள் குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்க வேண்டும் என கூறியுள்ளோம்.
அதனை செயல்படுத்துவதாக அரசு அதிகாரிகள் வாக்குறுதி கொடுத்துள்ளனர். அவை முதலமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டு தொடர்ச்சியாக கண்காணிக்கப்படும். இந்தப் பணிகளை விரைவுப்படுத்தும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது" என்றார்.

இதையடுத்து பிஎஸ்என்ஏ கல்லூரியில் நடைப்பெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான பூப்பந்து விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.