திண்டுக்கல்லில் பலத்த மழை
நீண்ட நாள்களுக்குப் பிறகு திண்டுக்கல் பகுதியில் செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டத்தில், கொடைக்கானல் நீங்கலாக சமவெளிப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வந்தது. திண்டுக்கல் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பிற்பகல், கோடை காலம் போன்று கடுமையான வெப்பம் நிலவியது.
இந்த நிலையில், மாலை 6.15 மணி முதல் சுமாா் 45 நிமிஷங்கள் பலத்த மழை பெய்தது. காற்றுடன் பெய்த இந்த மழையினால், நாகல்நகா், பிரதான சாலை, திருச்சி சாலை, பழனி சாலை உள்பட பல்வேறு இடங்களில் மழைநீா் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும், திண்டுக்கல் நகரின் பல இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.
நீண்ட நாள்களுக்குப் பின் பெய்த இந்த மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.