திருப்புவனம் அஜித்குமாருக்கு கஞ்சா அளித்து கொடூரத் தாக்குதல்! மூளையில் ரத்தக் கச...
திண்ணைப் பிரசாரம் மூலம் உறுப்பினா் சோ்க்கை: எம்எல்ஏ
மயிலாடுதுறை மாவட்டத்தில் திண்ணைப் பிரசாரம் மூலம் புதிய உறுப்பினா்களை சோ்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திமுக மாவட்ட செயலாளா் நிவேதா எம். முருகன் எம்எல்ஏ தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை கூறியது:
தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்களை அனைத்து மக்களும் அறியும் வகையில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற திட்டத்தை திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னெடுத்துள்ளாா்.
இத்திட்டத்தின்கீழ், மயிலாடுதுறை மாவட்டத்தில் 45 நாட்களில் மாவட்டத்தில் உள்ள வாக்காளா்களில் 60 சதவீதம் பேரை சந்தித்து, திண்ணைப் பிரசாரம் மூலம் அவா்களின் விருப்பத்துடன் திமுகவில் உறுப்பினா்களாக சோ்ப்பதற்கான முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளோம் என்றாா்.