லிபியா தலைநகரில் கடும் மோதல்! ஆயுதப் படை தலைவர் உள்பட 6 பேர் பலி!
தினமணி செய்தி எதிரொலி... கொரட்டி பகுதியில் மின்னழுத்த சோதனை
திருப்பத்தூா் அடுத்த கொரட்டி பகுதியில் மின்னழுத்த குறைபாடு உள்ளதாக செய்தி வெளியானதையடுத்து, மின்வாரிய அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று மின்னழுத்தத்தை சோதனை மேற்கொண்டனா்.
திருப்பத்தூா் அடுத்த கொரட்டி பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவது வழக்கமாகிவிட்டது. இந்த நிலையில், கடந்த 15 நாள்களுக்கும் மேலாக சீரான மின் விநியோகம் இல்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிப்பதாக ஞாயிற்றுக்கிழமை தினமணியில் விரிவான செய்தி வெளியானது.
இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் கொரட்டி, குமாரம்பட்டி, எலவம்பட்டி, பஞ்சனம்பட்டி, தண்டுக்கானுா் உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்குச் சென்று மின்னழுத்த குறைபாடு குறித்து சோதனை மேற்கொண்டனா்.
மேலும், கொரட்டி துணை மின் நிலையத்தில் உள்ள மின்மாற்றி பழுது சரி செய்யப்பட்டு வருவதாகவும், பழுது சீரடைந்த பிறகு மின் விநியோகம் சீராகும் எனவும் தெரிவித்தனா்.