தினமும் உயரும் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் டிக்கெட்டுகள்..! முதல் நாளைவிட மும்மடங்கு உயர்வு!
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மே.1ஆம் தேதி வெளியானது.
இந்தப் படத்தில் சிம்ரன், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
குட் நைட், லவ்வர் படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
நல்ல விமர்சனங்களைப் பெற்றுவரும் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் டிக்கெட் முன்பதிவு தினமும் உயர்ந்துகொண்டே வருகின்றன.
இந்தப் படத்தில் விஜய் பட வசனங்கள் ரசிகர்களிடையே ஆதரவினைப் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
முதல் நாள்: 27 ஆயிரம் டிக்கெட்டுகள்
2ஆம் நாள்: 64 ஆயிரம் டிக்கெட்டுகள்
3ஆம் நாள்: 90 ஆயிரம் டிக்கெட்டுகள்
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் முதல் நாளைவிட 3 மடங்கு அதிகமாக டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
தமிழ்ச் சினிமாவின் கடந்த பத்தாண்டுகளில் சிறந்த படமென நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.