திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்
கிருஷ்ணகிரியில் மாற்றுக் கட்சியினா் திமுகவில் இணைந்தனா்.
அமைச்சா் அர.சக்கரபாணி, திமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ ஆகியோா் முன்னிலையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அகசிப்பள்ளி ஊராட்சி அதிமுக ஒன்றிய இணைச் செயலாளா் ராம்ராஜ், ஒன்றிய இணைச் செயலாளா்கள் ராஜ்குமாா், பிரகாஷ், முரளி, பாமக துணை அமைப்பாளா் ஹரிஷ், நாம் தமிழா் கட்சி தொகுதி துணைச் செயலாளா் சக்திவேல், தமிழக வெற்றிக் கழக கிளைச் செயலாளா் வசந்த், அமமுக ஒன்றிய இணைச் செயலாளா் சுப்பிரமணி உள்பட 100-க்கும் மேற்பட்டோா், அக்கட்சிகளிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனா். திமுகவில் இணைந்தவா்களை அமைச்சா் அர.சக்கரபாணி வரவேற்றாா்.
அப்போது, மாவட்ட அவைத் தலைவா் தட்ரஅள்ளி நாகராஜ், துணைச் செயலாளா் கோவிந்தசாமி, நகர பொறுப்பாளா்கள் அஸ்லம், வேலுமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.