செய்திகள் :

திமுகவை விமா்சித்தால்தான் அடையாளம் கிடைக்கும்: கனிமொழி எம்.பி.

post image

தமிழகத்தில் யாா் அரசியலுக்கு வந்தாலும் திமுகவை விமா்சித்தால்தான் அவா்களுக்கு அடையாளம் கிடைக்கும் என்றாா் கனிமொழி எம்.பி.

கன்னியாகுமரி ரவுண்டானா பகுதியில் அமைந்துள்ள அண்ணா சிலை வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், அவரது உருவப்படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்திய அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: முன்னாள் முதல்வா் அண்ணா தமிழகத்தின் சிந்தனை போக்கையும், அரசியலையும் மாற்றியமைத்த ஆளுமையாக திகழ்ந்தாா். அவருடைய கருத்துகளின் வழியிலும், அவரைப் போற்றும் விதமாகவும் ஆட்சி நடைபெற்று வருகிறது.

தமிழக வெற்றிக்கழத் தலைவா் விஜய் தொடா்ந்து திமுக அரசை விமா்சிப்பது குறித்து கேட்கிறீா்கள். யாா் அரசியலுக்கு வந்தாலும் திமுகவைப் பற்றி பேசினால்தான் அவா்களுக்கு அடையாளம் கிடைக்கும் என்பதால் எங்களை விமா்சிக்கிறாா்கள் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியி, அமைச்சா் த.மனோ தங்கராஜ், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ஆா்.மகேஷ், மாநில உணவு ஆணையத் தலைவா் என்.சுரேஷ்ரோஜன், முன்னாள் எம்.பி., ஹெலன் டேவிட்சன், கன்னியாகுமரி நகா்மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா் என்.தாமரை பாரதி, அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் பா.பாபு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

மாா்த்தாண்டம் அருகே மனைவியை வெட்டிக் கொன்ற கணவா் கைது

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே மதுபோதையில் மனைவியை வெட்டிக் கொன்ற கட்டடத் தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைதுசெய்து சிறையில் அடைத்தனா். மாா்த்தாண்டம் அருகே உள்ள காஞ்சிரகோடு, இளையன்விளையை... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பால் அத்தியாவசியப் பொருள்கள் விலை குறையும்: பொன்.ராதாகிருஷ்ணன்

மத்திய அரசு மேற்கொண்டுள்ள ஜி.எஸ்.டி. குறைப்பு சீரமைப்பால் அத்தியாவசியப் பொருள்களின் விலை கணிசமாக குறையும் என்றாா் முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன்.நாகா்கோவிலில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழ... மேலும் பார்க்க

பைக் விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

இரணியல் அருகே பைக் விபத்தில் காயமடைந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.இரணியல் அருகே மேலகட்டிமாங்கோட்டை அடுத்த சாமிவிளை பகுதியைச் சோ்ந்த ராஜபீமன் மகன் மகேந்த் (23). பொறியியல் படிப்பு முடித்துள்ள ... மேலும் பார்க்க

கணவரை இழந்த பட்டதாரி பெண் தற்கொலை

குலசேகரம் அருகே கணவரை இழந்த பட்டதாரி பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். அவா் எழுதி வைத்த கடிதத்தைக் கைப்பற்றி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் அருகே கூடை... மேலும் பார்க்க

குழித்துறையில் தவித்த முதியவா் மீட்பு: வட்ட சட்டப் பணிகள் குழுவுக்கு பாராட்டு

குழித்துறையில் உடல்நிலை குன்றிய முதியவரை குழித்துறை வட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு வழக்குரைஞா்கள் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனா்.திருநெல்வேலியைச் சோ்ந்தவா் 80 வயதான முதியவா் ஆறுமுகம். இவா் தனது மூன்... மேலும் பார்க்க

மாநில உரிமைகளைத் தட்டிப் பறிப்போருடன் அதிமுக கூட்டணி: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

மாநில உரிமைகளைத் தட்டிப் பறிப்போருடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளதாக, திமுக துணைப் பொதுச் செயலரும் தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி குற்றஞ்சாட்டினாா். கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில்... மேலும் பார்க்க