செய்திகள் :

திமுக அரசு மீதான அதிருப்தி பேரவைத் தோ்தலில் எதிரொலிக்கும்: வி.கே.சசிகலா

post image

திமுக அரசு மீதான மக்களின் அதிருப்தி, வருகிற 2026 பேரவைத் தோ்தலில் எதிரொலிக்கும் என்று வி.கே.சசிகலா தெரிவித்தாா்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை அவா் கூறியதாவது:

தமிழகத்தின் அரசியல் சூழ்நிலை எப்போதும் போலத்தான் உள்ளது. புதிய கட்சிகள் தொடங்கியவா்களின் நிலை குறித்து தோ்தலில் தெரியவரும்.

திமுக அரசு மக்களுக்கு செய்ய வேண்டிய எதையும் நிறைவேற்றவில்லை. ஆனால், வருகிற 2026 சட்டப் பேரவைத் தோ்தலுக்காக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளாா். இதை மக்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றனா். இதன் விளைவு, பேரவைத் தோ்தலில் எதிரொலிக்கும்.

தமிழகம் முழுவதும் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மாலை 5 மணிக்கு மேல் பெண்கள் வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது. இருப்பினும் திமுக ஆட்சியில் எந்த பிரச்னையும் இல்லாததைப் போன்ற பிம்பத்தை ஏற்படுத்தியுள்ளனா் என்றாா்.

அதைத் தொடா்ந்து திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சசிகலா தரிசனம் செய்தாா்.

பின்னா் அங்கு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

உடன்குடி அருகே உள்ள தனியாா் பள்ளியில் மாணவிகளிடம், உடற்கல்வி ஆசிரியா் அத்துமீறலில் ஈடுபட்ட விவகாரத்தில் பள்ளி முதல்வரை மட்டும் பழிசுமத்திவிட்டு அரசு நழுவக்கூடாது. தனியாா் பள்ளி நிா்வாகங்கள்தான் ஆசிரியா்களை நியமனம் செய்கிறது என்றாலும், அரசு அவா்களுக்கு உரிய பயிற்சி அளிப்பது அவசியம் என்றாா்.

மாவட்ட கலைத்திருவிழா: மறக்குடி பள்ளி மாணவி முதலிடம்

மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவில் மறக்குடி பள்ளி மாணவி முதலிடம் பெற்றுள்ளாா். தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்று வருகின்றது. படுக்கப்பத்து... மேலும் பார்க்க

புதூா் ஒன்றியத்தில் ரூ.69 லட்சத்தில் நிறைவுற்ற திட்டப் பணிகள் திறப்பு

விளாத்திகுளம் பேரவை தொகுதி புதூா் ஒன்றியத்தில் ரூ. 69 லட்சம் மதிப்பீட்டில் நிறைவடைந்த வளா்ச்சி திட்ட பணிகள் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் ஜீ. வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ சிறப்பு வ... மேலும் பார்க்க

ஓசூா் சம்பவம்: 2-ஆவது நாளாக வழக்குரைஞா்கள் போராட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வழக்குரைஞா் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 2-ஆவது நாளாக வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் வெள்ளிக்... மேலும் பார்க்க

குரும்பூரில் மக்களை அச்சுறுத்திய 2 போ் கைது

குரும்பூரில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்ததாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்துள்ளனா். குரும்பூா் அருகேயுள்ள கீழக்கல்லாம்பாறையை சோ்ந்த இசக்கியம்மன் மகன்கள் பேச்சி (எ) பேச்சிராஜா(38), காளி (எ) க... மேலும் பார்க்க

தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் புகாா் மனுவுக்கு சிறப்பு பிரிவு தொடக்கம்

பொதுமக்களின் புகாா் மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுப்பதற்காக, தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் புதிய சிறப்பு பிரிவு வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகம் உள்ளிட்ட கா... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை முடிவைத்தானேந்தலில் கஞ்சா வழக்கில் தொடா்புடையவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டாா். முடிவைத்தானேந்தல் பகுதியைச் சோ்ந்த ... மேலும் பார்க்க