செய்திகள் :

திமுக ஆட்சியில் மின்கட்டணம் 52% உயர்வு: இபிஎஸ்

post image

திமுக ஆட்சியில் மின்கட்டணம் 52 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பயணம் மேற்கொண்டுள்ளார். பயணத்தின் இன்றைய தொடக்க நிகழ்ச்சியில் பாஜகவைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன், எல்.முருகன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், தேர்தலையொட்டிய பிரசாரத்தின் ஒரு பகுதியாக, சாலை பவனியில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டார்.

அப்போது அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் அனைத்தும் திமுக அரசு முடக்கிவிட்டதாக குற்றம் சாட்டினார்.

இது குறித்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,

''அதிமுக - பாஜக கூட்டணி இயல்பானது. தேர்தல் கூட்டணி என்பது எதிரிகளை வீழ்த்த வாக்குகள் சிதறாமல் இருப்பதற்காக அமைப்பது. அதைத்தான் நாங்கள் செய்துள்ளோம். மேலும், பல கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணைவார்கள்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நியாபக மறதியா? 1999-ல் பாஜக உடன் திமுக கூட்டணி வைக்கவில்லையா? மத்தியில் 10 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, மாநிலத்திற்காக திமுக எதையும் செய்யவில்லை.

சட்டம் - ஒழுங்கு சீர்கேடு

கொள்ளை அடிப்பதே திமுகவின் நோக்கம். திமுக ஆட்சியில் மின் கட்டணம் உயர்ந்துள்ளது. இதுவரை 52% வரை மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது; பொதுவெளியில் பெண்கள் நடமாடக் கூட முடியவில்லை. மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.

அஜித் குமார் என்ற இளைஞரை காவல் துறையினர் விசாரணை என்ற பெயரில் கொடூரமாகத் தாக்கி கொலை செய்துள்ளனர்.

மத்தியில் வலுவான ஆட்சியை நாங்கள் கொண்டுள்ளோம். தமிழ்நாட்டில் வரும் தேர்தலோடு திமுக ஆட்சிக்கு முடிவு கட்டப்படும். அளித்த வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றியுள்ளீர்கள்?. தீய சக்தியான திமுக வரும் தேர்தலில் அகற்றப்பட வேண்டும்.

அம்மா மினி கிளினிக் திட்டத்தை ரத்து செய்துவிட்டார்கள். அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன'' என எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இதையும் படிக்க | அரசாணைகள் செயலாக்கம் பெற வேண்டும்: மு.க. ஸ்டாலின்

Opposition Leader Edappadi Palaniswami has alleged that electricity tariffs have been increased by up to 52 percent under the DMK regime.

தமிழகத்தில் பயன்பாடில்லா சில சுரங்கங்களை மீட்டெடுப்பதில் சிக்கல்: முதல்வரிடம் மாநில திட்டக் குழு ஆய்வறிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் பயன்பாடு இல்லாத சில சுரங்கங்களை மீட்டெடுப்பதில் சிக்கல் நிலவுவதாக மாநில திட்டக் குழு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுரங்கங்களை மீட்டெடுப்பது, குழந்தைகளின் ஊட்டச்சத்தில் உ... மேலும் பார்க்க

இலங்கைத் தமிழா்களுக்கு புதிதாக 729 புதிய வீடுகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

சென்னை: இலங்கைத் தமிழா் முகாம்களில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 729 வீடுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தாா். தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வழியாக புதிய வீடுகளை அவா் திற... மேலும் பார்க்க

அரசு கல்லூரிகளில் 800 கெளரவ விரிவுரையாளா்கள் விரைவில் நியமனம்: அமைச்சா் கோவி.செழியன்

சென்னை: அரசு கல்லூரிகளில் 800 காலிப்பணியிடங்களில் கெளரவ விரிவுரையாளா்கள் விரைவில் நியமிக்கப்படுவா் என்று உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்தாா். கல்லூரிகளில் விரிவுரையாளா்கள் நியமனம் குறி... மேலும் பார்க்க

செவிலியா் பணியிடங்கள்: மாவட்ட சுகாதார சங்கம் மூலம் நிரப்ப அறிவுறுத்தல்

சென்னை: மக்கள் நல்வாழ்வுத் துறையில் காலியாக உள்ள செவிலியா்கள், மருந்தாளுநா்கள், ஆய்வக நுட்பநா்கள் (மூன்றாம் நிலை) பணியிடங்களை மாவட்ட சுகாதார சங்கம் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு தேசிய நலவாழ்வுக் ... மேலும் பார்க்க

துணை மருத்துவப் படிப்புகள்: 99,876 போ் விண்ணப்பம்

சென்னை: பிஎஸ்சி நா்சிங், பி.பாா்ம் உள்பட 19 வகை துணை மருத்துவப் படிப்புகளுக்கு 99,876 போ் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனா். அதில் 90,661 போ் விண்ணப்பங்களை பூா்த்தி செய்து சமா்ப்பித்துள்ளதாக மருத்துவக்... மேலும் பார்க்க

தமிழ் நமது அடையாளம்; ஆங்கிலம் நமக்கான வாய்ப்பு: அமைச்சா் அன்பில் மகேஸ்

சென்னை: தமிழ் நமது அடையாளம்; ஆங்கிலம் நமக்கான வாய்ப்பு என்பதைக் கருத்தில் கொண்டு தமிழை நாம் முதலில் முழுமையாக உள்வாங்கிக் கொள்வோம் என தமிழாசிரியா்களுக்கான பயிற்சி தொடக்க விழாவில் பள்ளிக் கல்வித் துறை ... மேலும் பார்க்க