செய்திகள் :

செவிலியா் பணியிடங்கள்: மாவட்ட சுகாதார சங்கம் மூலம் நிரப்ப அறிவுறுத்தல்

post image

சென்னை: மக்கள் நல்வாழ்வுத் துறையில் காலியாக உள்ள செவிலியா்கள், மருந்தாளுநா்கள், ஆய்வக நுட்பநா்கள் (மூன்றாம் நிலை) பணியிடங்களை மாவட்ட சுகாதார சங்கம் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு

தேசிய நலவாழ்வுக் குழுமம் அறிவுறுத்தியுள்ளது.

இதுவரை மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் (எம்ஆா்பி) மூலம் அப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வந்த நிலையில், தற்போது அதற்கான நியமன நடைமுறைகள் மாற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி மாவட்ட சுகாதார சங்கங்கள் வாயிலாக 2,500 செவிலியா்கள், 1,500 மருந்தாளுநா்கள் மற்றும் ஆய்வக நுட்பநா்கள் நியமிக்கப்பட உள்ளனா்.

இதுதொடா்பாக தேசிய நலவாழ்வுக் குழும திட்ட இயக்குநா் டாக்டா் அருண் தம்புராஜ், அனைத்து சுகாதாரத் துறை அதிகாரிகள், மருத்துவக் கல்லூரி முதல்வா்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்:

மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் இயங்கும் இயக்குநரகங்களில் காலியாக உள்ள செவிலியா், மருந்தாளுநா், ஆய்வக நுட்பநா் பணியிடங்களை நிரப்புவது தொடா்பாக கடந்த மே 21 மற்றும் ஜூன் 23-ஆம் தேதிகளில் துறைசாா் கலந்தாய்வுக் கூட்டத்தை மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் நடத்தினாா்.

அப்போது இயக்குநரக வாரியாக நிரப்பப்பட வேண்டிய பணியிடங்கள் குறித்து கேட்டறிந்த அவா், அவற்றுக்கு உடனடியாக தீா்வு காண்பது குறித்து விவாதித்தாா். அதன்பேரில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

காலியாக உள்ள பணியிடங்கள் கண்டறியப்பட்டு அவற்றை மாவட்ட சுகாதார சங்கங்கள் மூலமாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அதில் முக்கியமான முடிவு. அதற்கேற்ப செயல்பட்டு தற்காலிக அடிப்படையில் அந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

செவிலியா்கள், மருந்தாளுநா்கள், ஆய்வக நுட்பநா்கள் (மூன்றாம் நிலை) ஆகியோா் 11 மாத ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே நியமிக்கப்படுவா் என்பதையும், இப்பணி தற்காலிகாமனது என்பதையும் உறுதிபட சம்பந்தப்பட்டவா்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் டாக்டா் அருண் தம்புராஜ் குறிப்பிட்டுள்ளாா்.

அமைச்சர் சிவசங்கர் இழுத்த தேர் அச்சு முறிந்து சரிந்தது: பக்தர்கள் அதிர்ச்சி!

பெரம்பலூர் அருகே அமைச்சர் சிவசங்கர் இழுத்த ஐயனார் கோயில் தேர் அச்சு முறிந்து சரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. குன்னம் அருகே கோவில்பாளையம் கிராமத்தில் ஜயனார் கோயில் தேரோட்டம் நடைபெற்றது. அப்போது அம... மேலும் பார்க்க

சென்னை புறநகர் பகுதிகளில் மழை!

சென்னையின் புறநகர் பகுதிகளில் பரவலாக மிதமான மழை முதல் ஒருசில இடங்களில் கனமழையும் பெய்து வருகின்றது. சென்னை புறநகர் பகுதிகளான திருமழிசை, காட்டுப்பாக்கம், செம்பரம்பாக்கம், பூந்தமல்லி, நசரத்பேட்டை மற்றும... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 14 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்... மேலும் பார்க்க

போதைப் பொருள் வழக்கு: ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்!

போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ரூ. 10,000-க்கான சொந்த ஜாமீன், அதே தொகைக்கான இரு நபர்... மேலும் பார்க்க

கடலூர் ரயில் விபத்து அதிர்ச்சியளிக்கிறது: தவெக தலைவர் விஜய்!

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட் பகுதியில் நடந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியும் மன வேதனையையும் அளித்ததாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

பொது வேலை நிறுத்தம்: அரசு ஊழியர்களுக்கு தலைமைச் செயலாளர் எச்சரிக்கை

சென்னை: நாடு முழுவதும் நாளை நடக்கும் பொது வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.மத்திய தொழிற்சங்... மேலும் பார்க்க