செய்திகள் :

திமுக ஆட்சி விரைவில் அகற்றப்படும்: நயினார் நாகேந்திரன் பதில்

post image

காஞ்சிபுரம்: தேர்தல் வருவதற்கு இன்னும் ஒரு ஆண்டு இருக்கிறது. அதற்கு முன்னதாகவே தேர்தல் பணியை திமுக ஆரம்பித்திருந்தாலும் ஆட்சிக்கு வருவதை மக்கள் முடிவு செய்வார்கள். திமுக ஆட்சி விரைவில் அகற்றப்படும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71 ஆவது பீடாதிபதியாக ஸ்ரீசத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் புதன்கிழமை பதவியேற்று கொண்டார்.

இதன் நிகழ்வு காஞ்சிபுரம் காமாட்சியம்மன் ஆலய பஞ்சகங்கா குளத்தில் ஸ்ரீ விஜியேந்திரர் தலைமையில் தீட்சை அளிக்கப்பட்டு முறைப்படி மடாதிபதியாக பதவியேற்றார்.

இந்நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி, சுப்பிரமணிய சுவாமி, ஆடிட்டர் குருமூர்த்தி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

'உங்க அன்ப புரிஞ்சுக்குறேன்.. ஆனால்..!' - தவெக தலைவர் விஜய் பதிவு!

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், இளைய மடாதிபதி பதவியேற்பு விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

பாஜக - தவெக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பாஜக-தவெக கூட்டமிப் பேச்து குறித்து எனக்குத் தெரியாது என பதிலளித்தார்.

மேலும், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமித்ஷா சந்திப்பிற்கு பின் காமாட்சி அம்மன் ஆலயத்தில் உள்ளேன், தற்போது செய்தியாளர்களை சந்திக்கிறேன். நாளை கோட்டையில் சந்திக்கிறேன்.

திமுக ஆட்சி விரைவில் அகற்றப்படும். தேர்தல் வருவதற்கு இன்னும் ஒரு ஆண்டு இருக்கிறது. அதற்கு முன்னதாகவே தேர்தல் பணியை திமுக ஆரம்பித்து இருக்கலாம் , ஆனால் ஆட்சிக்கு வருவதை மக்கள் முடிவு செய்வார்கள் என நயினார் நாகேந்திரன் கூறினார்.

சென்னை மாநகரப் பேருந்துகளின் வழித்தட எண்கள் மாற்றம்!

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் இயங்கும் 7 வழித்தட பேருந்துகளின் எண்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்து தட எண்களை பகுதிவாரியாக சீரமைத்து, அதில் 7 வழித்தட எண்கள் ம... மேலும் பார்க்க

ஒழுங்கு நடவடிக்கை குழு அமைத்து விஜய் உத்தரவு!

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஒழுங்கு நடவடிக்கை குழு அமைத்து அதன் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பு:”கட்சி விதிகளின்படி, தமிழக வெற்றிக் கழகத் தலைவரே... மேலும் பார்க்க

உழைப்பாளர் நாள்: தமிழகம் முழுவதும் நாளை மதுக்கடைகள் அடைப்பு!

உழைப்பாளர் நாளையொட்டி தமிழகம் முழுவதும் நாளை(மே 1) மதுக்கடைகள் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.டாஸ்மாக் விற்பனை மதுபானக் கடைகள் அதனோடு இணைந்த மதுபானக் கூடங்கள், தனியார் மதுபானக் கூடங்கள், நட்சத்திர விடுதி... மேலும் பார்க்க

விஜயகாந்த்துக்கு பாரத ரத்னா, மணிமண்டபம்! தேமுதிக பொதுக் குழுவில் தீர்மானம்!

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசையும் மணிமண்டபம் கட்ட தமிழக அரசை வலியுறுத்தியும் அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.தருமபுரி... மேலும் பார்க்க

குழந்தைகளுக்கான தமிழ் பெயர்கள் கொண்ட இணையப்பக்கம்: மு.க. ஸ்டாலின்

சென்னை: குழந்தைகளுக்கு தமிழ் பெயர்கள் சூட்ட விரும்புபவர்களுக்கான இணையப்பக்கம் தொடங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தம்பி அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படும். குழந்தைகளுக்கா... மேலும் பார்க்க

கூட்டாட்சி என்பதே உண்மையான தேசபக்தி: முதல்வர் ஸ்டாலின்

தேசபக்தி என்பது நமக்குத் தேர்தல் அரசியல் முழக்கமல்ல. மாநில உரிமைகளுடனான கூட்டுறவுக் கூட்டாட்சி மிக்க இந்தியா என்பதே உண்மையான தேசபக்தியாகும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திமுக தலைவரும் முதல... மேலும் பார்க்க