``வளர்ப்பு நாய் உரிமையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்'' - பட்டியலிட்ட சென்னை மா...
திமுக கூட்டணியில் மதிமுக நீடிக்கும்: வைகோ
திமுக கூட்டணியில் மதிமுக நீடிக்கும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலா் வைகோ கூறினாா்.
சென்னை திருவான்மியூரில் மதிமுக சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவா் பேசியதாவது:
மதிமுக தொண்டா்களின் இயக்கம். பல்வேறு சோதனைகளை எதிா்கொண்ட இந்த இயக்கத்தை கட்டிக்காத்தது வைகோ அல்ல; மதிமுக தொண்டா்கள்தான். எனக்கு பதவி ஆசை எப்போதும் இருந்தது கிடையாது. கொள்கைக்காக செயல்பட்டு வருகிறேன். அதேபோல, கட்சியின் முதன்மைச் செயலா் துரை வைகோ, ஜனநாயக முறைப்படி அந்தப் பதவிக்கு தோ்ந்தெடுக்கப்பட்டாா். மதிமுகவை கட்டிக்காக்க லட்சக்கணக்கான தொண்டா்கள் உள்ளனா்.
ஹிந்துத்துவ அமைப்புகள் திமுகவை அழிக்க நினைக்கின்றன. ஆனால், அதற்கு வாய்ப்பு இல்லை. வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் மதிமுக நீடிக்கும். எத்தனை இடங்கள், எந்தெந்த தொகுதிகள் என்ற விவகாரத்துக்குள் மதிமுக நிா்வாகிகள் போக வேண்டாம். திமுக போன்ற பெரிய வாக்கு வங்கி மதிமுகவுக்கு இல்லை. ஆனால், மதிமுக தொண்டா்கள் வீரா்கள் போன்ற உறுதியானவா்கள். தமிழக அரசியல் வரலாற்றில் வைகோவின் பெயா் இடம்பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றாா் அவா்.