செய்திகள் :

'திமுக கூட்டணி வெலலெத்து போயுள்ளது' - தமிழிசை சௌந்தரராஜன்

post image

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “திமுக நடத்தும் போராட்டத்துக்கு மட்டும் காவல்துறை அனுமதி் வழங்குகிறது. அதுவே மற்ற கட்சிகளுக்கு அனுமதி கிடையாதா.

தமிழிசை சௌந்தரராஜன்

ஸ்டாலின் தலைமையில் சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது. எதிர்க்கட்சிகளுக்கு போராட அனுமதி மறுத்துவிட்டு, டங்ஸ்டன் விவகாரத்துக்கு போராட வைகோவுக்கு அனுமதி தருகிறார்கள். அம்பேத்கர் விவகாரத்தில் அமித்ஷாவுக்கு எதிராக போராட திருமாவளவனுக்கு அனுமதி கொடுக்கின்றனர்.

வேங்கை வயல் பிரச்னைக்கு தீர்வு கொடுத்தார்களா. தமிழக ஆளுநர் தேசிய கீதத்துக்காக கோரிக்கை வைத்தார். அதை நிராகரித்து விட்டு திமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். தமிழக அரசின் நிலைப்பாட்டை கண்டிக்கிறேன். தமிழகத்தில் எதிர்க்கட்சிகளின் உரிமை பறிக்கப்படுகிறது.

வேங்கை வயல்

யார் அந்த சார் என்று எதிர்க்கட்சிகள் கேட்கிறார்கள். ஆனால் அரசுக்கு எதிராக பேசிய ஒருவரை யார் அந்த பாட்டி என்று ஆளுங்கட்சியினர் தேடுகிறார்கள். அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.

பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கு தொகை எங்கே. இது 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு  மிகப்பெரிய அடியை கொடுக்கும். கருப்பு துப்பட்டா போட்டால் இவர்களுக்கு என்ன. முதலில் காவியை பார்த்து பயந்தார்கள். இப்போது கருப்பு துப்பட்டாவுக்கு ஏன்  பயப்படுகிறார்கள்.

திமுக கூட்டணி கட்சிகள்

எதிர்க்கட்சிகளின் குரல் ஒடுக்கப்படுவதன் மூலம் தமிழகத்தில் எமர்ஜென்ஸி ஆட்சி நடக்கிறது.  திமுக கூட்டணி கட்சிகளின் குரலும் நெரிக்கப்படுகிறது. திமுக கூட்டணி தற்போது  வெலவெலத்து போயிருக்கிறது.” என்றார்.

Afghanistan: தாலிபான் அமைச்சருடன் இந்திய வெளியுறவு செயலாளர் சந்திப்பு - பேசியது என்ன?

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மவ்லானி அமிர் கான் முத்தாகியை சந்தித்துள்ளார். துபாயில் நடந்த இந்த சந்திப்பில் இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய வளர்ச... மேலும் பார்க்க

மதுரை: முதல்வர் ஸ்டாலின் படத்துடன் கலெக்டர் அலுவலகம் வந்த பாஜக நிர்வாகி; காரணம் என்ன?

முதல்வர் படத்துடன் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பா.ஜ.க நிர்வாகியால் பரபரப்பு ஏற்பட்டது. பாஜக நிர்வாகிகள்மனு அளிக்க வந்த மதுரை மாவட்ட பா.ஜ.க செயற்குழு உறுப்பினர் சரவணன் செய்தியாளர்களிடம்... மேலும் பார்க்க

'மீண்டும் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை...' - மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்; டெல்லிக்குப் பறந்த புகார்

மீண்டும் தமிழக பா.ஜ.க தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார் என்ற வாசகத்துடன் மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அண்ணாமலைமூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை உட்கட்சித் தேர்தலை நடத்தும் பா.... மேலும் பார்க்க

"காவல் துறையின் அராஜக நடவடிக்கை கண்டனத்திற்குரியது.." - சு.வெங்கடேசன் கோபத்தின் காரணம் என்ன?

"டங்ஸ்டன் போராட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளரை குறிவைத்து காவல்துறை இழுத்துச் சென்றது ஏன்? சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என மதுரை நாடாளும... மேலும் பார்க்க

”திமுக அரசை அதன் கூட்டணிக் கட்சிகள் மயிலிறகால் மென்மையாக எதிர்க்கின்றன” - செம்மலை காட்டம்

தஞ்சாவூர் மாநகராட்சியில் நிலவி வரும் நிர்வாக சீர்கேடு, தி.மு.கமேயர்சண்.இராமநாதன் செய்கின்ற முறைகேடுகள் உள்ளிட்டவற்றைக் கண்டித்து அ.தி.மு.க சார்பில் தஞ்சாவூர் தபால் நிலையம் எதிரே கண்ட ஆர்ப்பாட்டம் நடைப... மேலும் பார்க்க