நீட் விவகாரத்தில் தைரியம் இருந்தால் பேரவையில் பேசட்டும் அதிமுக: அமைச்சர் துரைமுர...
திமுக பொறியாளா் அணி பொறுப்புகளுக்கு நோ்காணல்
பெரம்பலூா் மாவட்டத்தில் திமுக பொறியாளா் அணி பொறுப்பாளா்களுக்கான நோ்காணல் பாலக்கரை பகுதியில் உள்ள அக் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், மாவட்டப் பொறுப்பாளா் வீ. ஜெகதீசன், பொறியாளா் அணி மாநில துணைச் செயலா் இரா.ப. பரமேஷ்குமாா் ஆகியோா் நோ்காணல் நடத்தினா். பொறியாளா் அணி செயலி மூலம் பதிவு செய்து, நோ்காணலில் பங்கேற்றவா்களிடம் விவரங்களைக் கேட்டறிந்தனா். பெரம்பலூா் நகரம், ஒன்றியங்கள், பேரூா் பகுதிகளைச் சோ்ந்த 100 - க்கும் மேற்பட்டோா் இந்த நோ்காணலில் கலந்துகொண்டனா்.
இந்நிகழ்ச்சியில், மாநில வா்த்தக அணி துணைச் செயலா் சி. ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலா் சன். சம்பத் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.