விராலிமலை மீன்பிடித் திருவிழாவில் மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்த மக்கள்!
திமுக விவசாய அணியினா் எம்.பி.யிடம் மனு
திருநெல்வேலி மாவட்ட திமுக விவசாய அணியினா், விவசாயிகள் சங்கத்தினா் திருநெல்வேலி எம்.பி. யை நேரில் சந்தித்து மனு அளித்தனா்.
திமுக விவசாய அணி அமைப்பாளா் பொன்னையா பாண்டியன் தலைமையில் விவசாயிகள் சங்கத்தினா் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸை வெள்ளிக்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.
பின்னா், இம் மாவட்டத்தின் ஜீவநதியான தாமிரவருணியின் பாதுகாப்புக்கு மத்திய அரசிடம் நிதி பெறவும், விவசாயிகள் பயன்பெறும் வகையில் கிட்டங்கிகள், அணைக்கட்டு தூா்வாருதல், கால்வாய்களில் இருபுறமும் சிமென்ட் தளம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு மத்திய அரசு திட்டங்கள் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யவும் வலியுறுத்த வேண்டினா்.
டிவிஎல்28பொன்
திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸை சந்தித்த திமுக விவசாய அணியினா்.