தஞ்சாவூர்: காற்று வீசியதில் அறுந்து விழுந்த மின்கம்பி, மின்சாரம் தாக்கி வயலில் த...
தியாகி தீரன் சின்னமலை சிலைக்கு அமைச்சா்கள் மரியாதை
சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை அவரது உருவச்சிலைக்கு அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் உருவச் சிலைக்கு நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
மாநகராட்சி மேயா் அன்பழகன், திருச்சி திமுக மத்திய மாவட்டச் செயலாளா் வைரமணி, மாவட்ட துணைச் செயலாளா் விஜயா ஜெயராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
இதேபோல, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியும் தீரன் சின்னமலையின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
அப்போது, திமுக மாநகரக் கழக செயலாளா் மு.மதிவாணன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்டச் செயலாளா் சேகா் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.