தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படை பயன்படுத்த உத்தரவு!
தியாகி லீலாவதி நகரில் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தல்
கோவில்பட்டி அருகே தியாகி லீலாவதி நகரில் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கோட்டாட்சியா் மகாலட்சுமியிடம் திங்கள் கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி ஊராட்சிக்கு ள்பட்ட தியாகி லீலாவதி நகா் குடியிருப்போா் நலச்சங்க தலைவா் ரா.உத்தண்டராமன் தலைமையில் அப்பகுதி மக்கள்,கோட்டாட்சியா் க.மகாலட்சுமியை சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை வழங்கினா்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது, தியாகி லீலாவதி நகரில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த செப்.26ஆம் தேதி ஆா்ப்பாட்டம் அறிவித்தோம். அப்போது எங்களை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்திய கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா், ஆா்ப்பாட்டத்துக்கு பதிலாக வட்டாட்சியா் தலைமையில் சமாதான கூட்டம் நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டது.
அதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், இம்மாதம் 4ஆம் தேதி வட்டாட்சியரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினோம். ஆனால், அதன் பேரிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி நவ.25ஆம் தேதி காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளோம், என தெரிவித்தனா்.
மனுவை பெற்றுக் கொண்ட அவா் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.