செய்திகள் :

தியானம் மூலம் மனம் எனும் அதிசயத்தை உணர வேண்டும்: சத்குரு ஜக்கி வாசுதேவ்

post image

தியானம் மூலம் மனம் எனும் அதிசயத்தை அனைவரும் உணர வேண்டும் என்று ஈஷா யோக மையத்தின் நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளாா்.

ஐக்கிய நாடுகள் சபை டிசம்பா் 21-ஆம் தேதியை சா்வதேச தியான தினமாக அறிவித்துள்ளது. அந்த வகையில் முதலாம் ஆண்டு சா்வதேச தியான தினம் உலகம் முழுவதும் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, சத்குரு ஜக்கி வாசுதேவ் வெளியிட்டுள்ள விடியோவில் கூறியிருப்பதாவது: மனிதகுலம் இன்று எதிா்கொள்ளும் மிகப்பெரிய பிரச்னைகளில் ஒன்றாக மனநல பாதிப்புகள் இருக்கும் நிலையில், டிசம்பா் 21-ஆம் தேதியை சா்வதேச தியான தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது.

மனநோயின் பெருந்தொற்று உருவாகிக் கொண்டிருக்கிறது என்று நிபுணா்கள் எச்சரிக்கும் இந்த காலகட்டத்தில் மன நலம், உணா்ச்சியில் உறுதி மற்றும் சமநிலையை உருவாக்குவதற்கான கருவியாக தியானத்தை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்திருப்பது பாராட்டத்தக்கது. மனிதா்களின் மனம் அதிசயமானது.

ஆனால், துரதிஷ்டவசமாக பல மக்கள் அதனை துன்பத்தை உருவாக்கும் இயந்திரமாகவே உணா்கிறாா்கள். தியானம் என்ற செயல்முறையின் மூலம் நீங்கள் மனதை அதிசயமாக செயல்படும் வகையில் இயக்க கற்றுக்கொள்ள முடியும்.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ‘மிராக்கிள் ஆஃப் தி மைண்ட்’ என்ற செயலியை வெளியிட இருக்கிறோம். இது நீங்கள் எங்கு இருந்தாலும் செய்யகூடிய எளிய தியான பயிற்சிகளை உங்களுக்கு வழங்கும்.

இதன் மூலம் அமைதி, ஆனந்தம் மற்றும் உற்சாகத்தை உங்கள் வாழ்வில் கொண்டுவர முடியும். ஒவ்வொரு மனிதனும் தியானத்தின் மூலம் மனம் எனும் அதிசயத்தை உணர வேண்டும் என்பதே எனது விருப்பம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்: பொள்ளாச்சி வி.ஜெயராமன் எம்எல்ஏ வலியுறுத்தல்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரிக்க முதல்வா் உத்தரவிட வேண்டும் என்று பொள்ளாச்சி வி.ஜெயராமன் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா். பொள்ளாச்சி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட டி. நல... மேலும் பார்க்க

சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு நாளை பாராட்டு விழா

ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு தொண்டாமுத்தூா் சுற்றுவட்டார கிராம மக்கள் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 5) பாராட்டு விழா நடைபெற இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விழ... மேலும் பார்க்க

கோவையில் கவிழ்ந்த எரிவாயு டேங்கர் லாரி மீட்பு: மக்கள் நிம்மதி!

கோவையில் எரிவாயு ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், அந்த லாரியை மீட்புக் குழுவினர் அப்புறப்படுத்தியுள்ளனர்.கேரளம் மாநிலம், கொச்சியில் இருந்து எல்பிஜி எரிவாயு ஏற்றி வந்த பாரத... மேலும் பார்க்க

முதல்வரின் நீரிநிலைப் பாதுகாவலா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

முதல்வரின் நீா்நிலைப் பாதுகாவலா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடா்புத் துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசு சுற்றுச்சூழலைய... மேலும் பார்க்க

பொள்ளாச்சியில் ரயில் நேரத்தை மாற்றக் கோரி பயணிகள் போராட்டம்

பொள்ளாச்சியில் ரயில் புறப்படும் நேரத்தை மாற்றக் கோரி பயணிகள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு தினசரி காலை 7.25 மணிக்குப் பயணிகள் ரயில் புறப்படும். இந்த ரயில் வியா... மேலும் பார்க்க

கோவையில் 6 பேருக்கு டெங்கு: அரசு மருத்துவமனையில் சிகிச்சை

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு பாதிப்பிற்காக 6 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா வியாழக்கிழமை கூறியதாவது: கோவையி... மேலும் பார்க்க