செய்திகள் :

திரிணமூல் காங்கிரஸ் மூத்த எம்எல்ஏ மரணம்

post image

மாரடைப்பால் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்எல்ஏ நசிருதீன் அகமது மரணமடைந்தார்.

கலிகஞ்ச் தொகுதியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்எல்ஏ நசிருதீன் அகமதுவுக்கு சனிக்கிழமை இரவு 11:50 மணியளவில் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் பலாசி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் அங்கு அவர் மாரடைப்பால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மரணமடைந்தார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

அகமதுவின் மறைவு குறித்து முதல்வர் மமதா பானர்ஜி வெளியிட்ட பதிவிட்ட பதிவில், நசிருதீன் அகமதுவின் திடீர் மறைவு வருத்தமளிக்கிறது.

மேலும் 2 ராம்சார் பகுதிகள்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். மறைந்த அகமது அப்பகுதியில் பிரபலமாக 'லால் டா' என்று அழைக்கப்பட்டார்.

வழக்கறிஞரான அகமது, 2011ஆம் ஆண்டு முதல்முறையாக சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டார்.

பின்னர் 2021ஆம் ஆண்டு கலிகஞ்ச் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிரம்: உலகளவில் அதிகபட்ச ஜிபிஎஸ் பாதிப்பு?

இந்தியாவில் மகாராஷ்டிரத்திலும், மேற்கு வங்கத்திலும் ஜிபிஎஸ் நோய்ப் பாதிப்பு அதிகரித்து வருகிறது.இந்தியாவில் பரவிவரும் ஜிபிஎஸ் நோய்ப் பாதிப்பால் (Guillain-Barré Syndrome) உலகளவில் ஒரே நேரத்தில் அதிகப்ப... மேலும் பார்க்க

மும்பை விமான நிலையத்தில் விபத்து: கார் மோதியதில் 5 பேர் காயம், ஓட்டுநர் கைது

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் கார் மோதியதில் இரண்டு வெளிநாட்டவர்கள் உள்பட 5 பேர் காயமடைந்தனர்.மகாராஷ்டிர மாநிலம், மும்பை சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவரை இறக்கிவிடுவதற்காக சொகுசு கார் ஒன்று ஞா... மேலும் பார்க்க

பூபதிநகர் குண்டுவெடிப்பு வழக்கு: முக்கிய குற்றவாளி கைது

பூபதிநகர் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி மேற்கு வங்கத்தின்... மேலும் பார்க்க

ஆம் ஆத்மி தொண்டர்களைத் தாக்கும் பாஜகவினர்: ஆணையத்துக்கு கேஜரிவால் கடிதம்!

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி களப்பணியில் ஈடுபட்டிருக்கும் ஆம் ஆத்மி தொண்டர்களை பாஜகவினர் மிரட்டுவதாகவும், தாக்குதலில் ஈடுபடுவதாகவும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் குற்றம் சாட்... மேலும் பார்க்க

சம்பல் வன்முறை: மேலும் ஒருவர் கைது

சம்பல் வன்முறை தொடா்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.இதுகுறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஷ் சந்திரா கூறுகையில், கைது செய்யப்பட்ட நபர் ககு சராய் பக... மேலும் பார்க்க

குஜராத்: பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து - 5 பேர் பலி; 37 பேர் படுகாயம்

குஜராத்தில் சொகுசுப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். 37 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பார்க்க