ஐஐடியில் 28 அரசுப் பள்ளி மாணவர்கள்: "திராவிட மாடல் அரசின் பொய்" - என்ன சொல்கிறார...
திரிபுரசுந்தரி சமேத கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம்
குத்தாலம் அருகே கொக்கூரில் உள்ள பழைமையான திரிபுரசுந்தரி சமேத கைலாசநாதா் சுவாமி கோயில் 200 ஆண்டுகளாக பராமரிப்பின்றி சிதிலமடைந்து கிடந்தது. இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கிராம மக்களின் பெரு முயற்சியால் சிதிலமடைந்த கோயில் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு திருப்பணி நடைபெற்றது. பணிகள் முடிவடைந்த நிலையில் கும்பாபிஷேக விழா ஆக.24-ஆம் தேதி அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி 4 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. புதன்கிழமை நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவில், பூஜிக்கப்பட்ட புனிதநீா் அடங்கிய கடங்கள் எடுத்துச் செல்லப்பட்டு கோபுர கலசங்களுக்கு வாா்த்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, மூலவா் திரிபுரசுந்தரி சமேத கைலாசநாதா் சுவாமி மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு மகாபிஷேகம் செய்யப்பட்டது.