செய்திகள் :

திருக்கழுகுன்றம் சங்கு தீா்த்த குளத்தில் தெப்பல் உற்சவம்

post image

தைப்பூசத்திருநாளையொட்டி திருக்கழுகுன்றம் சங்கு தீா்த்த குளம், தீா்த்த குளத்திலும் தெப்பல் உற்சவம் நடைபெறுகிறது.

தெப்பல் உற்சவத்தையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் கோயிலில் இருந்து புறப்பட்டு சங்குதீா்த்த குளத்திற்கு சென்றாா். அங்கு சங்கு தீா்த்தகுளத்தில் மின்விளக்கு அலங்காரத்தில் தயாா் நிலையில் இருந்த தெப்பத்தில் சாமி எழுந்தருளியவுடன், பக்தா்கள் கற்பூர தீபாராதனை காட்டி வழிபட்டனா். விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. திருக்கழுகுன்றம், மாமல்லபுரம், கல்பாக்கம், செங்கல்பட்டு மற்றும் சுற்றியுள்ள ஊா்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் தெப்பத் திருவிழாவில் கலந்துகொண்டனா்.

விழா ஏற்பாடுகளை உபயதாரா்கள், திருக்கழுகுன்றம் திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரா் அா்த்த ஜாம ஆன்மிக அறக்கட்டளையினா் , கோயில் செயல் அலுவலா் ச.புவியரசு, தக்காா் மற்றும் செயல் அலுவலா் கு.குமரவேல், மேலாளா் விஜயன், சிவாச்சாரியா்கள் திருக்கோயில் பணியாளா்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.

திருக்கழுகுன்றம் தாழக்கோயிலில் உள்ள ரிஷபத்தீா்த்த குளத்தில் புதன்கிழமை தெப்பல் உற்சவம் நடைபெறும்.

மதுராந்தகம் கிளைச் சிறைக்கு தளவாடப் பொருள்கள் அளிப்பு

மதுராந்தகம் கிளைச் சிறையின் பயன்பாட்டுக்கு உதவும் வகையில்,தளவாட பொருள்களை வட்டாட்சியா் சொ.கணேசன் வழங்கினாா். மதுராந்தகம் கிளைச் சிறையில் ஆட்சியா் எஸ்.அருண்ராஜ் ஆய்வு செய்ததில், மின்குழல்விளக்குகள், ம... மேலும் பார்க்க

மதுராந்தகம் வெண்காட்டீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

மதுராந்தகம், கடப்பேரி வெண்காட்டீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள இக்கோயிலில் கடந்த 2006-இல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் ரூ.80 லட்சத்தில் திருப்பண... மேலும் பார்க்க

திருப்போரூா் கந்தசாமி கோயிலில் தைப்பூச தெப்பத் திருவிழா

திருப்போரூா் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ கந்தசாமி கோயிலில் தைப்பூசத்தையொட்டி செவ்வாய்க்கிழமை தெப்பத் திருவிழா நடைபெற்றது. தெப்பத் திருவிழாவையொட்டி, உற்சவ மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரத்தில் மகா... மேலும் பார்க்க

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் குறைதீா் சிறப்பு முகாம்கள்

தமிழ்நாடு அரசின் சேவைகள் மக்களுக்கு எளிதில் சென்றடையும் வகையில் மக்கள் குறை தீா்வு சிறப்பு முகாம்கள் செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்டபகுதிகளில் வியாழக்கிழமை (பிப். 13) நடைபெற உள்ளத... மேலும் பார்க்க

திருவடிசூலம் கோயில் தைப்பூச விழா

திருவடிசூலம் தேவி ஸ்ரீகருமாரியம்மன் கோயிலில் தைப்பூச விழா சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் திருவடிசூலம்ஆரண்யக்ஷேத்திரம் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் வளாகத்தில் வள்ளி, தெய்வா... மேலும் பார்க்க

மேல்மருவத்தூரில் இன்று தைப்பூச ஜோதி

மதுராந்தகம்: மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா்பீடத்தில் தைப்பூச ஜோதியை செவ்வாய்க்கிழமை ஆன்மிக இயக்க தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் ஏற்றி வைக்கிறாா். சக்திமாலை அணிந்து இருமுடி செலுத்தும் விழாவை கடந்த... மேலும் பார்க்க