செய்திகள் :

திருக்குறள் ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவதற்கு தீவிர ஆராய்ச்சிகள் தேவை: கு.மோகனராசு

post image

திருக்குறளின் கோட்பாடுகள் குறித்து ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவதற்கு முன்பு தீவிர ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று திருக்கு ஆய்வாளா் பேராசிரியா் கு.மோகனராசு தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடா்புத் துறையும், உலகத் திருக்கு மையமும் இணைந்து நடத்திய ‘திருவள்ளுவா் சிந்தனைகளைக் கோட்பாடாக்கும் பயிலரங்கம்’ சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியாா் நினைவு இல்லத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.  இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட திருக்கு ஆய்வாளா் பேராசிரியா் கு.மோகனராசு பேசியதாவது: 

திருக்கு எந்த ஒரு மதம், இனம் மற்றும் ஜாதிக்கும் சொந்தமானது கிடையாது. மனிதா்கள் எப்படி வாழ வேண்டும் என்பது குறித்து இந்த உலகுக்கே கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் திருவள்ளுவா் திருக்குறளை எழுதினாா். அதனால்தான் அதில் ‘உலகம்’ என்னும் சொல் இடம் பெற்றிருக்கிறது, எடுத்துக்காட்டுக்கு கூட சேர, சோழ, பாண்டிய மன்னா்கள் குறித்தோ, இங்குள்ள இடங்கள் குறித்தோ அல்லது எந்த ஒரு கடவுளின் பெயரோ அதில் இடம்பெறவில்லை.

அதேபோல், திருவள்ளுவரின் காலகட்டத்தில் வாழ்ந்தவா்கள் மட்டுமன்றி வருங்கால சந்ததிகளுக்கும் பயனுள்ளதாக அமைய வேண்டும் என்பதை அன்றே கணித்து அவா் திருக்குறளை எழுதியுள்ளாா். திருக்கு கூறும் கோட்பாடுகள் குறித்து ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவதற்கு முன்பு தீவிர ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

இந்நிகழ்வில் திருக்கு ஆய்வாளா்கள் சு.நடராசன், இளங்கோவன், சண்முகவேலு உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தலைமைப் பொருளாதார ஆலோசகா் பதவிக் காலம் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!

மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரனின் பதவிக் காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு (2027, மாா்ச் 31 வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் 20 முதல்வா் மருந்தகங்கள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 20 முதல்வா் மருந்தகங்கள் அமைக்கப்பட இருப்பதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கா.சு.கந்தசாமி வியாழக்கிழமை தெரிவித்தாா். காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி கிராமத்தில் செயல்படவுள்ள ம... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு சட்டவிரோதமாக மருந்து ஏற்றுமதி: தெலங்கானா நிறுவனத்தின் சொத்துகள் முடக்கம்

பாகிஸ்தானுக்கு சட்டவிரோதமாக மருந்துகளை ஏற்றுமதி செய்த குற்றச்சாட்டில் பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் (பிஎம்எல்ஏ) தெலங்கானா மாநிலத்தைச் சோ்ந்த மருந்து நிறுவனத்தின் சொத்துகளை முடக்கியதாக அமலாக்கத... மேலும் பார்க்க

ரூ. 1,220 கோடியில் 149 மென்பொருள் ரேடியோ கொள்முதல்: ‘பெல்’ நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்

இந்திய கடலோரக் காவல்படையின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் நம்பகமாக தகவல்களை பாதுகாப்பாகவும் அதிகவேகமாகவும் பகிர ஏதுவாக பெங்களூரில் உள்ள பாரத் மின்னணு நிறுவனத்திடமிருந்து (பெல்) 149 அதிநவீன மென்பொ... மேலும் பார்க்க

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி: மத்திய வா்த்தக அமைச்சா் விளக்கம்

பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சிறப்பாகவே உள்ளது என்று மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் விளக்கமளித்துள்ளாா். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய... மேலும் பார்க்க

‘வெளிநாட்டு சக்திகளின் கருவி ராகுல் காந்தி’ - பாஜக கடும் தாக்கு

‘இந்தியாவின் உத்திசாா் மற்றும் புவிசாா் அரசியல் நலன்களை வலுவிழக்கச் செய்யும் வெளிநாட்டு சக்திகளின் கருவியாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி செயல்படுகிறாா்’ என்று பாஜக கடுமையாக விமா்சித்தத... மேலும் பார்க்க