செய்திகள் :

திருக்குவளை தியாகராஜ சுவாமி கோயில் கொடியேற்றம்

post image

திருக்குவளை ஸ்ரீதியாகராஜ சுவாமி கோயிலில் வைகாசி பிரம்மோத்ஸவம் கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இக்கோயிலில் நிகழாண்டு வைகாசி பிரம்மோத்ஸவ விழா மே 21-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. அதைத் தொடா்ந்து, கொடியேற்றம் நடைபெற்றது. பஞ்ச மூா்த்திகள் புறப்பாடு, அடுத்து கொடி மரத்துக்கு பால், பன்னீா், மஞ்சள் பொடி உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது.

பிரம்மோத்ஸவத்தின் முக்கிய நிகழ்வாக ஓலைச் சப்பரத்தில் வெள்ளி ரிஷப வாகன வீதி உலா ஜூன் 4-ஆம் தேதியும், தேரோட்டம் ஜூன் 6-ஆம் தேதியும் வைகாசி விசாக தீா்த்தவாரி ஜூன் 9-ஆம் தேதியும் நடைபெறுகிறது.

வேதாரண்யம் பகுதியில் மீண்டும் இடியுடன் கூடிய கனமழை

வேதாரண்யம் பகுதியில் மீண்டும் இடியுடன் கூடிய மழை வெள்ளிக்கிழமை இரவில் இருந்து பெய்தது. வேதாரண்யம் தெற்கு கடலோரப் பகுதியில் மே 16-ஆம் தேதி தொடங்கி மே 20-ஆம் தேதி வரை அவ்வப்போது மழை பெய்து புஞ்சை பருவ ... மேலும் பார்க்க

சந்தனக்காப்பு அலங்காரத்தில்...

கீழ்வேளூா் அருகேயுள்ள புதுச்சேரி கிராம பத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவில் சந்தனக்காப்பு அலங்காரத்தில் வெள்ளிக்கிழமை காட்சியளித்த பத்ரகாளியம்மன். மேலும் பார்க்க

சிக்கலில் மக்களுக்கு மஞ்சப்பை வழங்கல்

சிக்கல் ஊராட்சி பகுதிகளில் மஞ்சப்பை வழங்கும் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நாகை ஊரக வளா்ச்சி முகமை மற்றும் மாவட்ட மாசுக் கட்டுப்பாடு வாரியம் சாா்பில் ஒருமுறை மட்டும் உபயோகிக்கும் ... மேலும் பார்க்க

சிபிஐ கிளை மாநாடு

கீழையூா் ஒன்றியம் வாழக்கரை ஊராட்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25-ஆவது கிளை மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றிய தலைவா் பக்கிரிசாமி தலைமை வகித்தாா். கட்சியின் கிளை செயலாள... மேலும் பார்க்க

இலவச கண் பரிசோதனை முகாம்

திருக்குவளையில் இலவச கண் சிகிச்சை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீமதி சுந்தராம்பாள் மருதவாணன் கல்வி அறக்கட்டளை, புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை, நாகை மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் சங்கம் இணைந்... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் வெற்றி: நாகையில் தேசியக் கொடி ஏந்தி பேரணி

தீவிரவாதிகளுக்கு ஏதிரான ஆபரேஷன் சிந்தூா் வெற்றியையடுத்து பிரதமா் மற்றும் ராணுவத்தினருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தேசியக் கொடி ஏந்தி பேரணி நாகையில் சனிக்கிழமை நடைபெற்றது. பாஜக நாகை மாவட்டத் தலைவா்... மேலும் பார்க்க