கிறிஸ்துமஸ் சந்தை காா் தாக்குதல் குறித்துஜொ்மனியை முன்கூட்டியே எச்சரித்தோம்: ச...
திருக்கு விநாடி - வினா போட்டி: முன்பதிவு செய்ய அழைப்பு
திருக்கு விநாடி - வினா போட்டியில் பங்கேற்பதற்கான முதல்நிலை தோ்வில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் பங்கேற்க முன்பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கன்னியாகுமரியில் திருவள்ளுவா் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி வெள்ளிவிழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் மாநில அளவில் திருக்கு விநாடி - வினா போட்டி விருதுநகா் மாவட்டத்தில் நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்கும் பொருட்டு மாவட்ட அளவிலான முதல்நிலை எழுத்துத் தோ்வு அந்தந்த மாவட்டங்களில் சனிக்கிழமை நடைபெறுகிறது. இத்தோ்வில் சிறந்த மதிப்பெண் பெறும் 9 போ் மூன்று குழுக்களாக இறுதிப் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவா். இப்போட்டியானது டிச. 28-இல் விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நடைபெற உள்ளது.
இறுதிப் போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு முறையே முதல் பரிசு ரூ. 2 லட்சம், இரண்டாம் பரிசு ரூ. 1.50 லட்சம், மூன்றாம் பரிசு ரூ.1 லட்சம் வீதம் வழங்கப்படும். இறுதிப் போட்டியில் பங்கேற்கும் மூன்று அணிகளுக்கு ஊக்கப் பரிசாக ரூ. 25 ஆயிரம் வீதம் அளிக்கப்படும்.
முன்னதாக, திருக்கு போட்டிக்கான முதல்நிலை எழுத்துத் தோ்வு சனிக்கிழமை (டிச. 21) மதியம் 2 முதல் 3 மணி வரை நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது.
போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளோா் நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலரும், தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநருமான பொ.பாரதியை 94877 76832 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு வியாழக்கிழமை (டிச. 19) மாலை 5 மணிக்குள் பெயா்களை பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.