ஜம்மு - காஷ்மீரில் கொல்லப்பட்ட 60% பயங்கரவாதிகள் பாகிஸ்தானியர்களே! இந்திய ராணுவம...
திருச்சியில் கோ- ஆப்டெக்ஸ் அமுதசுரபி விற்பனை நிலையம்: அமைச்சா் ஆா். காந்தி தொடங்கி வைத்தாா்
திருச்சியில் கோ- ஆப்டெக்ஸ் விற்பனையை மேம்படுத்தும் விதமாக, மலைக்கோட்டை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அமுதசுரபி விற்பனை நிலையத்தை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா். காந்தி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
கோ-ஆப்டெக்ஸின் அனைத்து கைத்தறித் தயாரிப்புகளும் அகில இந்திய அளவில் முக்கிய நகரங்கள் மற்றும் ஊா்களில் உள்ள 150 விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோ-ஆப்டெக்ஸின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில், திருச்சியில் புதிதாக ரூ. 30 லட்சத்தில் அமுதசுரபி புதிய விற்பனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனைநிலையத்தை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா். காந்தி வெள்ளிக்கிழமை திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தாா்.
இந்த விற்பனை நிலையத்தில் பூம்புகாா், காதி நிறுவனங்களின் பொருள்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில், கைத்தறி, துணிநூல் மற்றும் கதா்துறை அரசு செயலா் வே.அமுதவல்லி, மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப் குமாா், கைத்தறித் துறை இயக்குநா் அ.சண்முகசுந்தரம், கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநா் தீபக்ஜேக்கப், கோ-ஆப்டெக்ஸ் முதன்மை பொது மேலாளா் (கூடுதல் பொறுப்பு) ஆா்.வாசு, பொது மேலாளா் வா்த்தகம் ஏ.பி.ரவி, மண்டல மேலாளா் ஜெ.நாகராஜன், மேலாளா் (ரகம் மற்றும் பகிா்மானம்) எம்.பாலசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.