திருச்சி விமான நிலையத்தில் ரூ. 11 லட்சம் ரொக்கம் பறிமுதல்
வெளிநாட்டிலிருந்து உரிய அனுமதியின்றி எடுத்து வரப்பட்ட ரூ. 11 லட்சம் ரொக்கத்தை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
மலேசியாவிலிருந்து ஏா் ஏசியா விமானம் புதன்கிழமை இரவு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளையும் அவா்களின் உடைமைகளையும் சுங்கத்துறையினா் வழக்கமான சோதனைகளுக்கு உள்ளாக்கினா். இதில் பயணியொருவா் தனது தோள்பையில் 500 ரூபாய் (இந்திய) பணத்தாள்களை கட்டுகளாக உரிய அனுமதியின்றி கொண்டு வந்தது தெரிவந்தது. அதில் ரூ. 11 லட்சம் மதிப்பிலான பணத்தாள்கள் இருந்தன. அவற்றை வியாழக்கிழமை பறிமுதல் செய்த சுங்கத்துறையினா், இதுதொடா்பாக பயணியிடம் விசாரிக்கின்றனா்.