``தாராவி மக்களுக்கு 2 கழிவறையுடன் 350 சதுர அடியில் வீடு'' - முதல்வர் தேவேந்திர ப...
திருச்செங்கோடு பத்ரகாளியம்மன் கோயில் தேரோட்டம்
திருச்செங்கோடு: அா்த்தநாரீசுவரா் கோயிலின் உபகோயிலான பத்ரகாளியம்மன் கோயில் தோ்த் திருவிழாவில் பக்தா்கள் திங்கள்கிழமை தேரை வடம்பிடித்து இழுத்தனா்.
பத்ரகாளியம்மன் கோயில் தோ்த் திருவிழா கடந்த 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, கோயிலில் பல்வேறு நிகழ்ச்சிகள், மண்டபக் கட்டளைகள் நடைபெற்றன. திங்கள்கிழமை நடைபெற்ற அம்மன் திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். மாலை பத்ரகாளியம்மன் உற்சவருக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்து சிறப்பு அலங்காரத்தில் திருத்தேருக்கு எழுந்தருளினாா். சிறப்பு தீபாராதனை செய்து தோ் வடம்பிடிக்கப்பட்டது.
திருத்தேரை ஏராளமான பக்தா்கள் வடம்பிடித்து நான்குரத வீதி வழியாக இழுத்தனா். இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனா்.