திருச்செந்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல்: பக்தா்கள் மிகுந்த அவதி
திருச்செந்தூரில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் பக்தா்கள், பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினா்.
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கானோா் வந்திருந்தனா்.
போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக் காணப்பட்டதுடன், கோயில் வளாகத்தில் போதிய இடம் இல்லாததால் ஆள்களை இறக்கிவிட்டு வாகனங்களை வெளியே நிறுத்துமாறு போக்குவரத்து போலீஸாா் அறிவுறுத்தினா். இதனால், கோயிலுக்கு வந்த வாகனங்கள் நகா் முழுவதும் காலைமுதல் இரவு வரை ஆங்காங்கே நின்ாலும், அணிவகுத்தும் சென்ாலும் போக்குவரத்து நெரிசல் பலமடங்கு அதிகரித்தது.
போலீஸாா் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியதுடன், இடையூறாக நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு ரூ. 500 அபராதம் விதித்தனா்.
பாலம் அமைக்கும் பணி: கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பெய்த அதி கனமழையால் திருச்செந்தூா் ஆவுடையாா்குளத்தின் மறுகால் ஓடை மூழ்கி நகரில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதையடுத்து, மறுகால் ஓடையிலுள்ள 6 பாலங்களை சீரமைக்கும் பணி கடந்த ஜூன் மாதம் தொடங்கி, 4 பாலங்கள் சீரமைக்கப்பட்டன.
தற்போது மற்றொரு பாலப் பணி கடந்த வாரம் தொடங்கியால் திருச்செந்தூரில் புறவழிச் சாலை அடைக்கப்பட்டு உள்ளே வரும் - வெளியே செல்லும் வாகனங்கள் நகரின் ரத வீதிகளைக் கடந்துதான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், நாள் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து போலீஸாா் இரவுபகலாக வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.