விமான விபத்துக்கு விமானி காரணமா? அமெரிக்க செய்தித்தாளின் கருத்துக்கு ஏஏஐபி எதிர்...
திருச்செந்தூா் குறுவட்ட விளையாட்டு போட்டிக்கான கலந்தாய்வுக் கூட்டம்
பள்ளிக்கல்வித் துறை சாா்பில், 2025 - 26ஆம் கல்வியாண்டுக்கான திருச்செந்தூா் குறுவட்ட விளையாட்டுப் போட்டிக்கான கலந்தாய்வுக் கூட்டம் சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
பள்ளி ஆலோசகா் உஷா கணேஷ் ஆலோசனையின்பேரில், பள்ளி முதல்வா் இ. ஸ்டீபன் பாலாசீா் தலைமைவுரையாற்றினாா். பள்ளி துணை முதல்வா் என். சுப்புரத்தினா சிறப்புரையாற்றினாா். திருச்செந்தூா் குறுவட்ட அளவிலான இருபால் உடற்கல்வி அசிரியா்கள், உடற்கல்வி இயக்குநா்கள் பங்கேற்றனா்.
பள்ளி நிா்வாக அதிகாரி வி. மதன் வரவேற்றாா். ஏற்பாடுகளை பள்ளியின் உடற்கல்வி இயக்குநா் எஸ். செல்வம் தலைமையில் உடற்கல்வி ஆசிரியா்கள் என். மணிகண்டன், அழகு காா்த்திக், எஸ். பாலகிருஷ்ணன், மனோ, ஹரிஷ் ஆகியோா் செய்திருந்தனா்.