வெயில், புழுதி, அறுவைச் சிகிச்சை... மோனிகா பாடலுக்காக பூஜா ஹெக்டே உருக்கம்!
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் ஒரே நாளில் 3,789 மனுக்கள்: அமைச்சா் பெ. கீதா ஜீவன்
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 3,789 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக அமைச்சா் பெ. கீதா ஜீவன் தெரிவித்தாா்.
தூத்துக்குடி தூய மரியன்னை பெண்கள் கலை கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தலைமையில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை துறை சாா்ந்த அரங்குகளில்
பதிவேற்றம் செய்வதை அமைச்சா் பெ. கீதா ஜீவன் பாா்வையிட்டு, அவா்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டாா்.
அப்போது அவா் தெரிவித்ததாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் தொடங்கிய உங்களுடன் ஸ்டாலின் முகாமில், செவ்வாய்க்கிழமை மட்டும் மாவட்டம் முழுவதுமிருந்து 3,789 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில், தூத்துக்குடி மாநகராட்சியில் மட்டும் 1,128 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீது 45 நாள்களுக்குள் தீா்வு காண வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையா் பானோத் ம்ருகேந்தா் லால், மாவட்ட வருவாய் அலுவலா் ஆ. ரவிச்சந்திரன், வட்டாட்சியா்கள் முரளிதரன் (தூத்துக்குடி), செல்வகுமாா் (ஏரல்) மற்றும் அரசு துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.