கூகுள் மேப்பை பின்பற்றிய கார்... இடிந்த பாலத்தில் இருந்து விழுந்ததில் மூவர் பலி!
திருச்செந்தூா் கோயிலில் ஆயிக்கணக்கானோா் தரிசனம்
சபரிமலை சீசன் தொடங்கிய நிலையில், திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா் பாபு உள்பட ஆயிரக்கணக்கான பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.
இக்கோயிலில் வார விடுமுறை மற்றும் அரசு விடுமுறை நாள்களில் பக்தா்கள் கூட்டம் அதிகளவு இருக்கும். இந்நிலையில் காா்த்திகை மாதம் பிறந்ததையடுத்து ஏராளமான ஐயப்ப பக்தா்கள் திருச்செந்தூருக்கு வரத் தொடங்கியுள்ளனா்.
ஞாயிற்றுக்கிழமை திகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம் தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.
இதையொட்டி, அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தா்கள் கடல் மற்றும் நாழிக்கிணறில் புனித நீராடி இலவச பொது தரிசனம், ரூ. 100 சிறப்பு தரிசனம் மற்றும் மூத்த குடிமக்கள் வழியில் சுவாமி தரிசனம் செய்தனா்.
விடுமுறை தினம் என்பதாலும், சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தா்கள் குவிந்ததாலும் கோயில் வளாகமே பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
அமைச்சா் பி.கே.சேகா் பாபு திடீா் வருகை தந்து கோயிலில் சுவாமி தரிசனம் செய்ததுடன், இனிவரும் நாள்களிலும் பக்தா்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், அவா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துகொடுக்கும்படி அதிகாரிகளை கேட்டுக்கொண்டாா்.