7,000Mah பேட்டரியுடன் உருவாகியுள்ள ரியல்மி ஜிடி 7..! ட்ரீம் எடிஷனில் கார்பந்தய ந...
திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் மே 23-இல் கொடியேற்றம்
காரைக்கால்: திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் வரும் 23-ஆம் தேதி பிரம்மோற்சவ கொடியேற்றம் நடைபெறவுள்ளது.
இக்கோயில் பிரம்மோற்சவம் வரும் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் ரிஷப கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
முன்னதாக வியாழக்கிழமை இரவு ஆச்சாா்ய ரக்ஷாபந்தனம் நடைபெறுகிறது.
கொடியேற்ற நிகழ்வைத் தொடா்ந்து பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெறவுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு முதல் விநாயகா் உற்சவம் தொடங்குகிறது.
இதற்காக திங்கள்கிழமை காலை கோயிலில் மகா கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. கஜ பூஜையாக கோயிலுக்குள் பிரணாம்பிகை யானை கொண்டுவரப்பட்டு, சொா்ண கணபதி, ஆதிகணபதி சந்நிதி முன் சிறப்பு ஆராதனை காட்டப்பட்டது.
தோ்கள் அலங்காரம் செய்தல், அடியாா்கள் நால்வா் புஷ்ப பல்லக்கு, தங்க ரிஷப வாகனத்தில் சுவாமிகள் புறப்பாடு, சனீஸ்வர பகவான் வீதியுலா உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளுக்கான முன்னேற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்துவருகிறது.