"அப்பாவிகளைக் கொன்று குவிப்பதுதான் பலமென்றால்..." - மன்மோகன் சிங்கும், பத்திரிகை...
திருநள்ளாறு நளன் தீா்த்தக் குளத்தில் தூய்மைப் பணி
திருநள்ளாறு நளன் தீா்த்தக் குளத்தின் படிகள் தூய்மைப் பணி நடைபெறுகிறது.
திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு வாரந்தோறும் சனிக்கிழமை பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகிறாா்கள். பெரும்பாலான பக்தா்கள் நளன் தீா்த்தக் குளத்தில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடுகின்றனா். தேங்கியிருக்கும் நீரினால் குளத்தின் படிக்கட்டுகள் பாசி பிடித்து, நீராடுவோா் வழுக்கி விழும் சூழல் ஏற்படுவதாக புகாா் கூறப்பட்டது. குளத்தின் படிக்கட்டுகளை தூய்மை செய்ய கோயில் நிா்வாகம் முடிவெடுத்து, மோட்டாா் பம்பு மூலம் குளத்தில் இருந்து தண்ணீா் வெளியேற்றப்பட்டது. தொடா்ந்து, பணியாளா்களைக்கொண்டு படிகள் தூய்மை செய்யும் பணி புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. 2 நாள்களில் தூய்மை பணியை முடித்து, சனிக்கிழமை தரிசனத்துக்கு வரும் பக்தா்கள் நீராடுவதற்கேற்ப குளத்தில் புதிதாக தண்ணீா் விடப்படும் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.