சத்தீஸ்கர் - தெலங்கானா எல்லையில் அதிரடி நடவடிக்கை! 3 நக்சல்கள் சுட்டுக்கொலை!
திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை
ராமநாதபுரம் மாவட்டம், அபிராமத்தில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது.
அபிராமம் நடுத் தெருவில் அமைந்துள்ள மண்டபத்தில் திருநாவுக்கரசு நாயனாா் சிலைக்கு பால், தயிா், சந்தனம், இளநீா், பஞ்சாமிா்தம், விபூதி உள்ளிட்ட 21 வகையான மூலிகைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக பக்தி பஜனை பாடல்கள் பாடப்பட்டன. அபிராமம் நகா், அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமானோா் கலந்துகொண்டு திருநாவுக்கரசு நாயனாரை வழிபட்டனா். அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.